Pages

Tuesday, October 5, 2010

3 வயது சிறுத்தை புலி சாவு

பர்கூர் வனப்பகுதியில் வாகனம் மோதி ரோட்டுக்கு வந்த 3 வயது சிறுத்தை புலி சாவு

அந்திïர், அக். 5-
http://dailythanthi.com/article.asp?NewsID=598490&disdate=10/5/2010&advt=2

அந்திïர் அருகே பர்கூர் வனப்பகுதியில் வாகனம் மோதி ரோட்டுக்கு வந்த 3 வயது சிறுத்தை புலி செத்தது.

சிறுத்தை புலிக்குட்டி

ஈரோடு மாவட்டம் அந்திïர் அருகே பர்கூர் மலைப்பகுதியும் அடர்ந்த காடும் உள்ளது. இந்த மலைப்பாதையில் அந்திïரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நேற்று காலை அந்த வழியில் பஸ்சில் சென்றவர்கள் அந்திïர்-தாமரைக் கரை இடையே நெய்க்கரை கிராமம் அருகே வாகனத்தில் அடிபட்டு ஒரு சிறுத்தை புலிக்குட்டி நடு ரோட்டில் செத்துக்கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் மாவட்ட வன அதிகாரி ஜெகநாதன்,அந்திïர் கால்நடை மருத்துவர் அர்ச்சுனன்,அந்திïர் வனச்சரகர் பழனிச்சாமி மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரோட்டில் செத்துக்கிடந்த சிறுத்தை புலிக்குட்டியை அவர்கள் பார்வையிட்டனர். அதே இடத்திலேயே சிறுத்தை புலிக்குட்டிக்கு கால்நடை மருத்துவர் அர்ச்சுனன் பிரேத பரிசோதனை நடத்தினார்.

3 வயது ஆண் குட்டி

கால்நடை மருத்துவர் அர்ச்சுனன் நிருபர்களிடம் பேசுகையில், "அந்த சிறுத்தைக்குட்டி 3 வயது ஆண் குட்டி ஆகும். ஒரு மீட்டர் நீளமும், 49 சென்டிமீட்டர் உயரமும் உள்ளது. அந்த குட்டியின் பற்கள் கலர் மாறவில்லை. நகங்கள் கூர்மையாக உள்ளன. இதுவரை இந்த குட்டியானது தாய் சிறுத்தையுடன் இருந்துள்ளது. இப்போது தாயை பிரிந்து வழிதவறி வந்து ரோட்டோரம் உள்ள மலை மீது இருந்து ரோட்டில் குதித்தபோது அந்த வழியில் சென்ற வாகனம் மோதி செத்துள்ளது" என்று கூறினார்.

வனத்துறை அதிகாரி நிருபரிடம் பேசுகையில், " சிறுத்தைப்புலி 2 முதல் 3 குட்டிகள் போடும். எனவே தாய் சிறுத்தைப்புலி மற்ற குட்டிகளுடன் அருகில் உள்ள வனப்பகுதியில் தான் நடமாடும்" என்று கூறினார். வாகனம் மோதி சிறுத்தை புலிக்குட்டி செத்தது பற்றிய தகவல் அறிந்ததும் மலைப்பகுதி கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அந்திïர், எண்ணமங்கலம், கோவிலூர், தாமரைக்கரை, பர்கூர், பட்டக்கரை, பாலக்கரை மற்றும் சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு செத்துக் கிடந்த சிறுத்தை புலிக்குட்டியை பார்த்தனர். மேலும் அந்த வழியில் பஸ், கார் மற்றும் வாகனங்களில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி விட்டு இறங்கி வந்து சிறுத்தை புலிக்குட்டியை பார்த்தனர்.