Pages

Wednesday, October 13, 2010

மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பு

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பு நடவடிக்கை ஆவின் ஒன்றிய அதிகாரி தகவல்

கோவை,அக்.14-
http://dailythanthi.com/article.asp?NewsID=600474&disdate=10/14/2010&advt=2

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சம் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் ஒன்றிய பொது மேலாளர் சோ.சிராஜ் கூறினார்.

ஆவின் ஒன்றியம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை ஆவின் ஒன்றியம் மூலம் 595 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்களில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 199 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்க உறுப்பினர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது பற்றி கோவை ஆவின் பொது மேலாளர் டாக்டர் சோ.சிராஜ் கூறியதாவது:-

கோவை ஆவின் ஒன்றிய பகுதியில் கால்நடை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் கறவை மாடுகளுக்கு 50 சதவீத மானியத்தில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 1114 கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இனி வருகிற காலங்களில் 10 ஆயிரம் கால்நடைகளுக்கு காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தப்படும்.

1000 புல் வெட்டுகள் கருவிகள்

இது தவிர பசுந்தீவன புல் வளர்ப்பு திட்டத்தின் மூலம் 2010-11-ம் ஆண்டுக்கு சோளம், மற்றும் ஆப்ரிக்கன் மக்கா சோளவிதைகள் 11 ஆயிரத்து 920 கிலோ 100 சதவீத மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு, கோவை மற்றும் திருப்பூரில் உள்ள பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களும் நடப்பாண்டில் அவர்கள் இருப்பிடத்திலேயே 100 சதவீத மானிய அடிப்படையில் பச்சை பாசி தீவனம் மற்றும் குழிகள் அமைத்து கால்நடைகளுக்கு வேண்டிய தீவனத்தை வளர்த்திட திட்டமிடப்பட்டுள்ளது. பசும்புல் தீவனம் வீணாவதை கருத்தில் கொண்டு அவைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி கறவை மாடுகளுக்கு இடுவதற்கு 1000 எண்ணிக்கை புல் வெட்டும் கருவிகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

செயற்கை கருவூட்டல்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் நுண்ணிய தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களின் சினை பிடிக்காத கறவை மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து இதுவரை கருத்தரிக்கும் முறையின் கீழ் ரூ.3.32 லட்சம் மதிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் செயற்கை முறை கருவூட்டல் திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 200 மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பிரதம பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகள் ஆண்டுக்கு ஒரு கன்று ஈணுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.