Pages

Thursday, December 2, 2010

காட்டுப்பன்றி வேட்டையாடியவர்கள் கைது

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2010,04:16 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138079

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, காட்டுப்பன்றியை வேட்டையாடிய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.பொள்ளாச்சி கோட்டூர் அருகேயுள்ள பொன்னாலம்மன் துறையில் காட்டுப்பன்றிகள் அதிகமாக உலா வருகின்றன. அவற்றை சிலர் வேட்டையாடி சாப்பிடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. 

பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, பொன்னாலம்மன் துறையிலுள்ள தனியார் தோட்டத்தில் வெடி சப்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, ஏதோ வன விலங்கு சிதைந்து இருந்தது தெரியவந்தது.

அதன் உடல் பாகத்தை சேர்த்து வைத்து பார்த்தபோது, காட்டுப்பன்றியின் உடல் என்பது தெரியவந்தது.காட்டுப்பன்றிகளை வேட்டையாடி சாப்பிடுவதை உறுதி செய்த வனத்துறையினர், கறி சமைக்க ஏற்பாடு செய்த காளியாபுரத்தை சேர்ந்த சதிஷ் (35), சக்திவேல்(39), பொன்னாலம்மன்துறை மாரியப்பன் (55), பாலக்காட்டை சேர்ந்த சந்திரன் (59) ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய துரையனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்த நான்கு பேருக்கும் தலா 15 ஆயிரம் வீதம் அபாராதம் விதிக்கப்பட்டது.