Pages

Friday, December 10, 2010

400ஆடுகள் பலி

டி.கல்லுப்பட்டி, பேரைïர் பகுதிகளில் காணை நோய் தாக்கி 400ஆடுகள் பலி
மேலும் பல ஆடுகளுக்கு பாதிப்பு

பேரைïர், டிச.10-
http://dailythanthi.com/article.asp?NewsID=612727&disdate=12/10/2010&advt=2

டி.கல்லுப்பட்டி, பேரைïர் பகுதிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆடுகள் காணை நோய் தாக்கி பலியாகியுள்ளன. நோய்பாதித்து சாகும் நிலையில் உள்ள ஆடுகளை இறைச்சிகடைகளுக்கு விற்பதால், அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆடுவளர்ப்பு

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி, பேரைïர் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்ததாக ஆடு வளர்க்கும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள முத்தப்பன்பட்டி, சின்னையாபாளையம், சோலைப்பட்டி விலக்கு, டி.கல்லுப்பட்டி என்.ஜி.ஓ. காலனி, காரைக்கேணி உள்ளிட்ட பல கிராமங்களில் ஏழை விவசாயிகள் ஆடுவளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆடுகளை இந்த பகுதியில் உள்ள கரிசல் காட்டில் மேய்ச்சலுக்கு விடுவார்கள்.

கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருகிறது. பொதுவாகவே மழைக்காலங்களில் கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது.

காணை நோய்

முறையாக சிகிச்சை அளித்தால் மட்டுமே மழை காலத்தில் கால்நடைகளை நோயில் இருந்து காப்பாற்ற முடியும். சமீபத்தில் பெய்த மழை காரணமாக கரிசல்காட்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் நடந்து செல்வதால், கால்களில் புண்கள் உருவாகின்றன. கால்குளம்புகளில் புண் ஏற்பட்டு காணை நோய் தாக்குகிறது. ஆடுகள் நடக்க முடியாமல் தடுமாறி சுருண்டு விழுகின்றன.

தொடர்ந்து வாயிலும் புண்கள் உருவாகின்றன. இதனால் ஆடுகள் இரையெடுக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றன. ஆடுவளர்ப்போரும் தங்களுக்கு தெரிந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகளைபோட்டு ஆடுகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் பலனளிப்பதில்லை.

மரணம்

கால் புண்கள், வாயிலும் புண்கள் என்ற நிலையில் நடைபிணமாக மாறும் ஆடுகள் இறுதியில் சுருண்டு விழுந்து செத்துவிடுகின்றன. டி.கல்லுப்பட்டி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த வடிவேல் என்பவரது 15 ஆடுகளும், பூங்காவனம் என்பவரின் 15 ஆடுகளும், சின்னபாளையத்தை சேர்ந்த சமயன் என்பவரின் 16 ஆடுகளும், முத்தப்பன்பட்டி மாரியப்பனின் 8 ஆடுகளும், முத்தாண்டியின் 12 ஆடுகளும், சோலைப்பட்டி லாங்கர் என்பவரின் 10 ஆடுகள் உள்பட சுமார் 400க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து விட்டன. மேலும் பல ஆடுகள் இறக்கும் நிலையில் உள்ளன.

செத்த ஆடுகளுக்கு விலை கிடைப்பதில்லை என்பதால் அவற்றை ஆங்காங்கே நீர்நிலைகளிலும், ஆற்றிலும், சோளக்காட்டில் குழிதோண்டியும் போட்டுவிடுகின்றனர்.

குற்றுயிரும், குலைஉயிருமாக இருக்கும் ஆடுகளை கிடைத்தவரை லாபம் என்று சிலர், இறைச்சிக்கடைகளுக்கு விற்றுவிடுகின்றனர். அவற்றை ரூ.50, 100 கொடுத்து வாங்கும் ஒருசில கடைக்காரர்கள் ஆட்டை அறுத்து இறைச்சியாக விற்றுவிடுகின்றனர்.

நோய் அபாயம்

அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களும் நோய் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் மட்டும் கடந்த சில நாட்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. நோய் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகள் குறைந்த விலைக்கு இறைச்சிக்கடைகளுக்கு விற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வடிவேல் என்பவர் கூறும்போது, தொடர்மழையால் கால்நடைகள் அனைத்தும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. நாங்களும் எங்களுக்குத்தெரிந்த அளவிற்கு வைத்தியம் பார்க்கிறோம். இதுவரை எனக்கு 15 ஆடுகள் இறந்துவிட்டன. நோய் பாதித்த ஆடுகளை தனியாக பிரித்து வைத்துள்ளோம். ரூ.4 ஆயிரம் வரை ஊசி, மருந்துகளுக்கு செலவழித்துள்ளேன். இருப்பினும் ஆடுகளை காப்பாற்ற முடியவில்லை` என்றார்.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஆடுகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கால்நடைதுறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று அப்பகுதி கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.