பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2012,03:29 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=406711
மதுரை:திண்டுக்கல் மாவட்டம் தவசிமேடையை சேர்ந்த ஜேசுராஜ் மதுரைஐ கோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: காளைகளை சாகச காட்சி விலங்குகளாக பயன்படுத்த தடை விதித்து, மத்திய அரசு 2011 ல் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இதை ரத்து செய்யவும், திருவிழாவையொட்டி தவசிமேடையில் பிப்.,19 ல் ஜல்லிக்கட்டு நடத்தவும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், ஆர்.கருப்பையா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் காமேஸ்வரன், அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் எம்.கோவிந்தன் ஆஜராயினர். நீதிபதிகள்," ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது, என இடைக்கால உத்தரவிட்டனர்.