Pages

Wednesday, February 1, 2012

ஈரோட்டில் ஒரே மாதத்தில் 6 யானைகள் பலி-காரணங்கள் பல!


வியாழக்கிழமை, பிப்ரவரி 2, 2012, 8:57 [IST]
http://tamil.oneindia.in/news/2012/02/02/tamilnadu-6-elephants-die-a-month-erode-aid0176.html

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 6 யானைகள் பல்வேறு காரணங்களால் பலியாகி்யுள்ளது.

ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் 1,200 யானைகள் உள்ளன. இந்நிலையில் சென்னம்பட்டி வனச்சரகத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானையும் அதன் குட்டியும் இறந்தன. அந்த யானைகளுக்கு நோய்த்தடுப்பு சக்தி மிகவும் குறைந்ததால் தான் அவை இறந்தன என்று கூறப்படுகின்றது.

தொடர்ந்து கொத்தமங்கலம் வாட்டமலைப் பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் ஒரு யானையின் உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த யானை புலி அல்லது சிறுத்தை தாக்கி இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்தியூர் வனப்பகுதியில் குடல் புழு தாக்குதல் காரணமாக ஒரு யானை பலியாகியுள்ளது.

தொடர்ந்து கடந்த 27ம் தேதி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற யானையின் மீது பேருந்து மோதியதால் அது பலியானது. இது தவிர தலமலை வனப்பகுதியில் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை பலியானது. ஒரே மாதத்தில் 6 யானைகள் அடுத்தடுத்து பலியாகியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 23 யானைகள் உயிரிழந்தன. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகமானதாகும் என்று விலங்கின ஆர்வலர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.