Pages

Saturday, February 19, 2011

நவீன ஆட்டிறைச்சிக்கூடம்


பெரம்பூர் நவீன ஆட்டிறைச்சிக்கூடம் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் திறந்து வைக்கிறார்

சென்னை, பிப்.20-

பெரம்பூர் நவீன ஆட்டிறைச்சிக்கூடம் கட்டும் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்து கூறுகையில், 47 கோடி ரூபாய் செலவில் டி.பி.ஒ.டி. என்கிற தனியார் வடிவமைப்பும், கட்டுமானம், செயல்பாடு மற்றும் ஒப்படைத்தல் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெறுகின்றன. இதுவரை 20 கோடி மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளன. சுமார் ஒன்பதரை ஏக்கர் நிலப்பரப்பில், மூன்று ஏக்கரில் இந்த நவீன ஆட்டிறைச்சிக்கூடம் கட்டப்படுகிறது. நவீன ஆட்டிறைச்சிக்கூடத்தை இந்த மாத இறுதிக்குள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

இந்த நவீன ஆட்டிறைச்சிக்கூடத்தில் ஒரு மணி நேரத்தில் சுமார் 500 ஆடுகளும், 60 மாடுகளும் வெட்டப்பட்டு, இறைச்சிகள் பதப்படுத்தப்படும். இது ஆசியாவிலேயே மிகுந்த தொழில்நுட்பத்துடனும், சுகாதார மேம்பாட்டுடனும் கட்டப்படுகிறது. ஆட்டிறைச்சிக்கூடத்தை சுற்றி மீதியுள்ள இடங்களில் அழகிய புல்வெளிகள் கொண்ட பூங்காவும், நடைப்பாதை அமைக்கும் பணிகளும் இன்னும் 4 மாதத்தில் முடிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் வி.எஸ்.பாபு, சேகர்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.