பதிவு செய்த நாள் : மே 16,2012,00:04 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=468056
மண்டபம்: மீன்வளத்தை அழித்து வரும் சில மீனவர்கள் மத்தியில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர் கோரிமுகமது, கடல் வளத்தை காக்க நண்டு குஞ்சுகளை கடலில் விடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், "ஒமேகா மெரைன்' மையம் என்ற பெயரில் கோரிமுகமது என்ற மீனவர் நண்டு, ஆக்டோபஸ் குஞ்சுகளை வளர்த்து கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீனவர்கள் பிடிக்கும் உயிர் நண்டுகளில் கருமுட்டையுடன் இருக்கும் நண்டுகளை வாங்கி குஞ்சுகளை பொரிக்க வைத்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குஞ்சுகளை, மீன்வளத்துறையினர் மூலம் நேற்று கடலில் விட்டார்.
இவர் கூறியதாவது: கடல் வளம் அழிந்து வருகிறது. குறிப்பாக நண்டுகள் போதிய அளவு பிடிபடுவதில்லை. இதனால் கருமுட்டையுடன் இருக்கும் நண்டுகளை வாங்கி தொட்டிகளில் விட்டு குஞ்சு பொரிக்க வைக்கிறேன். இவற்றை சேகரித்து கடலில் விட்டு வருகிறேன். ஒரு நண்டு 5 லட்சம் வீதம், ஆண்டிற்கு 150 டன் குஞ்சுகளை இடும். 48 மணி நேரம் ஆன பின் அவற்றை கடலில் விட்டால், ஆறு மாதங்களில் நன்றாக வளர்ந்து விடும், என்றார்.a