Pages

Friday, March 2, 2012

கோடை வெயிலை சமாளிக்க யானைகளுக்கு "ஷவர்'


பதிவு செய்த நாள் : மார்ச் 03,2012,01:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=418132

வண்டலூர்: கோடையை சமாளிக்கும் வகையில், வண்டலூர் பூங்கா யானைகள் இருப்பிடத்தில், இரண்டு, "ஷவர்கள்' அமைக்கப்பட்டுள்ளன.

வண்டலூர் உயிரியல் பூங்காவில், 20 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் இருப்பிடம் உள்ளது. இது, நாட்டில் உள்ள பூங்காக்களில் மிகப்பெரியதாகும். இங்கு ஆறு யானைக் குட்டிகள், ஒரு பெண் யானை என மொத்தம் ஏழு யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், கோடைக் காலத்தை யானைகள் சமாளிக்கும் வகையில், அதன் இருப்பிடத்தில், இரண்டு, "ஷவர்கள்' அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று யானைகள் தங்கும் இடத்திலும், மற்றொன்று பார்வையாளர்கள் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் பகுதியில் உள்ள, "ஷவரில்' மாலை மூன்று மணி முதல் நான்கு மணி வரை அனைத்து யானைகளும் வரிசையாக நின்று, 10முறை குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் அருகே யானைகள் சேற்றுக்குளியல் குளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யானைகள்,"ஷவரில்' குளிப்பதை இனி பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.