http://www.dinamalar.com/News_Detail.asp?Id=242712
பதிவு செய்த நாள் : மே 18,2011,06:12 IST
திருவனந்தபுரம் : கேரளாவில் கோயில் விழாக்கள் உள்ளிட்ட சமயம்சார்ந்த திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள திருவாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. கோயில் விழா என்ற பெயரில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிற. கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் முக்கிய விழாக்கள் நடத்தப்படுகின்றனர். இவற்றில் ஆராட்டு விழா, ஏழுநாளிப்பு (எர்ணாகுளம் ) போன்ற விழாக்கள் பிரசித்திபெற்றவை.இத்தகைய திருவிழாக்களின் போது ஏராளமான யானைகள் ஊர்வலமாக அழைத்துவரப்படுகின்றன.இவற்றில் சில யானைகள் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாக பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் இவைகள் கோபமுற்று, மதம்பிடித்து விடுகின்றன. இந்நிலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்திற்கு விலங்குகள் நல அமைப்பினர் யானைகளின் பாதுகாப்பு மற்றும் அவைகளின் மனநிலை குறித்து விளக்கிகூறியது. கோயில் விழாக்களில் யானைகளை பயன்படுத்து வேண்டாம் எனவும் அதனால் அவைகள் உடல் ரீதியாக மட்டுமி்ன்றி மன ரீதியாக பாதிகப்படுகிறது. இதனால் யானைகளுக்கு திடீரென மதம் பிடித்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட திருவனந்தபுரத்தில் நடந்த யானைகள் திருவிழாவில் நிகழ்ந்த சம்பவத்தால் யானைகளிடையே மோதல் ஏற்பட்டது அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்து.இது குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் எம். ராஜகோபால் நாயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி கேரளாவில் சபரிமலை, குரூவாயூர் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் திருவிழாக்களின் யானைகளை பயன்படுத்துவதை முடிந்தளவு குறைத்துக்கொள்ளப்படும் எனவும், மேலும் யானைகளை துன்புறுத்தா வகையில் அவைகளை எப்படி பராமரித்து வருவது குறித்து பிரசாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அது போன்று யானைகளை வைத்து தெருக்களில் ஊர்வலம் நடத்துவது தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்