கல்பாக்கம் அருகே சேற்றில் சிக்கி தவித்த புள்ளிமான் குட்டி மீட்பு வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்க ஏற்பாடு
சென்னை, மார்ச்.11-
http://dailythanthi.com/article.asp?NewsID=632647&disdate=3/11/2011&advt=2
கல்பாக்கம் அடுத்துள்ள பரசநல்லூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் பிரபாகரன், கவுதமன் ஆகியோர் நேற்று காலை பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றனர். வழியில் சேற்றில் ஆட்டுக்குட்டி போன்ற தோற்றம் கொண்ட விலங்கு சிக்கிக்கொண்டு மீள முடியாமல் கதறிக் கொண்டிருப்பதை பார்த்தனர். உடனடியாக சேற்றில் இறங்கி அதை மீட்டு தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்ததில் அது புள்ளிமான் குட்டி என தெரியவந்தது.
பின்னர் இது குறித்து வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய் ஆய்வாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராணி, திருப்போரூர் வனசரகர் எம்.மூர்த்தி மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மான்குட்டியை பார்வையிட்டனர்.
வனசரகர் மூர்த்தி கூறுகையில், ``பிறந்து ஒன்றரை மாதமேயான சுமார் 2 அடி உயரமுள்ள இந்த அழகிய ஆண் புள்ளிமான் குட்டி வழிதவறி வந்துள்ளது. இது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்படும்'' என்றார்.