Pages

Monday, November 16, 2020

-கடைசி தீபாவளி-

அடையாறு எல்.பி ரோட்ல‌ இருக்கிற பாலத்திற்கு அடியில் தான் நான் இருந்தேன். வழக்கமாகப் பகல் நேரத்திலே அங்கேதான் இருப்பேன். இரவு நேரங்களில் பக்கத்தில் இருக்கிற தெருவுக்குச் சென்று ஒரு மரத்துக்குக் கீழே சிறிய  பள்ளம் தோண்டி படுத்துக் கொள்வேன்.

அந்தத் தெரு முழுவதும் அலுவலகங்கள் தான் அதனால் இரவு நேரங்களில் வண்டிகள் எதுவும் வராது.பாலத்தின் கீழே இருக்கிற பிச்சைக்காரர் அவருக்குக் கிடைக்கின்ற கறிசோற்றை எனக்கும் தருவார். எனக்கு அவர் நண்பர் அவருக்கு  நான்  நண்பர். என்ன ஆனந்த் ன்னு கூப்பிடுவாரு.

அப்பப்ப இன்னொருத்தர் வருவார்.வரும்பொழுதெல்லாம் பிஸ்கட், சோறு, பிரியாணி  இந்தமாதிரி தருவார்.  தண்ணி கூட ஒரு டப்பாவில் கொண்டுவந்து வைப்பார். அவரு வைக்கிறதுக்கு முன்னாடி தண்ணி குடிக்க கொஞ்சம் தூரம் நடந்து போகணும்.

அப்படிப் போகும்போது என்னோட தங்கச்சி மீது பெட்ரோல் பங்க் முன்னாடி வந்த ஒரு குப்பை வண்டிக்காரன் லமேலஏற்றிக் கொன்னுட்டான் அப்ப அவளுக்கு ஒரு வயசு. எனக்கு 5 வயசு இருக்கும் போது என்னோட அம்மா ரோடு கிராஸ் பண்ணும்போது ஒரு பஸ்சில் அடிபட்டு இறந்துட்டாங்க. அன்றிலிருந்து நான் தனியாக பழகிட்டேன் .இப்ப எனக்கு ஏழு வயசு இருக்கும்.

இப்ப கொஞ்ச நாளாகவே நான் இரவு நேரங்களில் தங்குகிற அந்த தெருவில் நிறைய சின்னபசங்களைப் பார்க்கிறேன்அங்க இங்க ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பாங்க. புதுசா குடி வந்திருக்கிறார்கள் போல‌. அப்பப்ப எனக்கு பிஸ்கட் தருவாங்க நான் அவங்களைப் பார்த்தாலே வாலைஆட்டிக்கொண்டு அவங்களிடம் சென்று விடுவேன். அன்று வழக்கமாகப் படுக்கின்ற மரத்துக்குக் கீழே படுத்து இருந்தேன். திடீர்னு ஒரு சத்தம் என்னவென்று  சுதாரிப்பதற்குள் என் கண்ணில் வந்து என்னவோ அடித்தது, அதில் என் கண் வெளியில் வந்துவிட்டது.

டேய்! இந்த நேரத்துல பட்டாசு வெடிச்சுட்டு...! என்று யாரோ அந்த பசங்களா அதட்டுற சத்தம் காதில் விழுந்தது. கண்ணு மண்ணு தெரியாம நான் ஓடிக்கொண்டிருந்தேன். முடிவில் பாலத்துக்கு கீழே இருக்கிற ஒரு கார்ருக்கு அடியில சென்று படுத்து விட்டேன்




ரெண்டு நாட்கள் வலியோட சாப்பிடக்கூட வெளியில் வராமல்  காருக்கடியிலேயே கிடந்தேன். யாரோ என்னை  வந்து கூப்பிட்டாங்க. நான் வெளிலையே வரவில்லைவழக்கமாக வந்து சாப்பாடு தண்ணீர் வைப்பவர்கூட வந்து அழைத்தார். எனக்கு அப்பொழுது இருந்த மனநிலையில் அவரைக் கூட நான் கடிக்கப் பார்த்தேன். சிறிது நேரம் சென்றபின்  இரண்டு மூன்று பேர் வலையோடு வந்து என்ன பிடித்துக்கொண்டு போனார்கள். பிடித்துக் கொண்டு சென்று ஆபரேஷன் செய்து  கண்களை எடுத்து விட்டார்கள்.

ஆனால் என்னால் பழைய நிலைக்கு வர முடியவில்லை. ஏதாவது சத்தம் கேட்டாலே என்னவோ பயமாக இருக்கிறது.

இத இப்பொழுது உங்களிடம் சொல்லிக்கொண்ருக்கும் இந்த நேரத்தில் கூட என்னோட உயிர்  பிரிந்துகொண்டிருக்கிறது. அநேகமாக இதான் என்னோட கடைசி  தீபாவளியாக  இருக்கும்.