Pages

Thursday, September 2, 2010

யானைகள் அழிகின்றன

பதிவு செய்த நாள் 9/3/2010 12:57:57 AM
http://dinakaran.com/indiadetail.aspx?id=14491&id1=1

புதுடெல்லி : சுரங்கம் தோண்டுவதால் யானைகள் அழிகின்றன. எனவே, யானைகள் காடுகளை கடக்கும் பாதைகளில் சுரங்கப்பணிகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள யானைகளில் ஆறில் ஒன்று இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 25 ஆயிரம் யானைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக் காலங்களில் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே உரசல் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மனிதர்கள்தான். யானைகள் வாழும் காடுகள் ஆக்கிரமிக்கப்படுவதால் மனிதர்களை யானைகள் தாக்குகின்றன. அதே போல், யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் பாதையில், புதிதாக சாலைகள் அமைத்தல், வயல்கள் அமைத்தல் போன்ற செயல்களும் இந்த உரசலுக்கு காரணம். அதே நேரத்தில், தந்தத்துக்காக கொல்லப்படும் யானைகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனால், யானைகளை காக்க குழு ஒன்றை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைத்துள்ளது. இந்த குழு, யானைகளை காப்பது எப்படி என்பது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி அரசுக்கு சில பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. அதில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் போல் தேசிய யானைகள் பாதுகாப்பு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள வனப்பகுதிகளில் சுரங்கம், தொழில், பாசன திட்டங்களை செயல்படுத்த தடை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தவிர, குடியிருப்புகளுக்குள் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்களை அமைக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
இது பற்றி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ÔÔஜார்க்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர் மாநிலங்களில் சுரங்கங்கள் தோண்ட அனுமதி கேட்கிறார்கள். ஆனால், சுரங்கங்கள் தோண்டினால் யானைகள் அழிந்துவிடும். ஒரு காட்டில் இருந்து மற்றொரு காட்டுக்கு யானைகள் செல்லும் பாதை சுரங்கமாக மாறினால் யானைகள் பரிதவிக்கும். எனவே, இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றார்.