Pages

Wednesday, September 29, 2010

மாட்டு வண்டி பந்தயம்

கோவில் திருவிழா; மாட்டு வண்டி பந்தயம் 61 ஜோடிகள் கலந்து கொண்டன

கள்ளந்திரி, செப்.29-
http://dailythanthi.com/article.asp?NewsID=597248&disdate=9/29/2010&advt=2

மதுரை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாட்டுவண்டி பந்தயம்

மதுரை அழகர்கோவில் அருகே அ.வள்ளாலபட்டி நான்கு வளைவில் உள்ள நாகம்மாள் கோவில் பாலாபிசேகத்தையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து பெரிய மாட்டு வண்டிகளாக 21 ஜோடிகளும், சிறிய மாட்டு வண்டிகளாக 40 ஜோடிகளும் மொத்தம் 61 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

இதில் முதல் பரிசை கொட்டங்குடி ராஜேஸ்குமார், 2வது பரிசு சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் உமா ஜெயபாலகிருஷ்ணன், 3வது பரிசு கல்லணை விஸ்வா, 4வது பரிசு அவனியாபுரம் பசும்பொன் ஆகியோரது மாடுகளுக்கு கிடைத்தன.

சின்ன மாடுகள்

சின்னமாடுகளுக்கான பந்தயம் இரு பிரிவுகளாக நடந்தது. முதல்பிரிவில் பாண்டிகோவில் பாண்டிச்சாமி, 2வது பரிசு சின்னமனூர் எஸ்.இ.தங்கம், 3வது பரிசு மேலூர் எஸ்.வி.பி.முருகன், 4வது பரிசு மலம்பட்டி காயத்ரி ஆகியோருக்கு சொந்தமான மாடுகளுக்கு கிடைத்தது.

இரண்டாவது பிரிவில் முதல்பரிசு கொட்டகுடி அன்பரசன், 2வது பரிசு நொண்டிக்கோவில்பட்டி சின்னையாத்தேவர், 3வது பரிசு கொட்டகுடி பால்சாமி தேவர், 4வதுபரிசு தேனி மாவட்டம் உப்பார்பட்டி பிரேம்நாத் ஆகியோரது மாடுகளுக்கு கிடைத்தன. மாட்டுவண்டி பந்தயத்துக்கான ஏற்பாடுகளை அ.வல்லாளபட்டி நான்குவளவு அம்பல இளைஞர்கள் செய்து இருந்தனர்.