Pages

Sunday, September 8, 2024


 இரக்கமற்ற பாதிரியார்.

 

இன்று மாலை 7 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்திற்கு சென்றேன். எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளுக்கும் கடவுளுக்கு நன்றி கூறி வெளியே வந்தேன் .

 ஏறக்குறைய 200 பேர் கோயில்வளாகத்தில் இருந்தனர்.வீடில்லாத ஒரு நாய் கோயிலுக்கு வெளியே மனிதர்களோடு ஆழ்ந்து தூங்கிட்டிருந்தது.

கோயிலுக்கு வெளியே அந்த நாயை பார்த்து முறைத்துக்கொண்டு வெள்ளை அங்கியுடன் நடந்து சென்ற பாதிரியார் காவலாளியை அழைத்து அதை துரத்தச் சொன்னார் .

 70 வயது மதிக்கத்தக்க,  காவலாளிக்கு எந்த தகுதியும் இல்லாத அந்த கிழவன் ஒரு மரக்கட்டையை எடுத்துவந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த நாயின் நடு வயிற்றின் மீது தன்னால் முடிந்த பலத்துடன் அடித்தார். வலிதாங்காத அந்த நாய் அழுதுகொண்டே ஓடியது .

 இதை சற்றும் எதிர்பாராத நான் அந்த காவல் கிழவனிடம் கேட்டதற்கு " எனக்கு சம்பளம் தருபவர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன் என்றார்".

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொன்ன இயேசு பிரானின் போதனைகளை மக்களுக்கு போதிக்கும் இந்த பாதிரியார் சற்றும் இரக்கமற்றவர்

 

தெருவோரம் வாழும் வீடில்லாத அநாதை விலங்குகளை இரக்கமின்றி துன்புறுத்தும் இந்த பாதிரியாரை மன்னியுங்கள் இயேசுவே.


-Jerold