Pages

Wednesday, January 12, 2011

மதுரை கோர்ட்டில் ஆடு, சேவல் சண்டை

மதுரை கோர்ட்டில் ஆடு, சேவல் சண்டையுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

மதுரை, ஜன.13-
http://dailythanthi.com/article.asp?NewsID=620263&disdate=1/13/2011&advt=2

மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆடு, சேவல் சண்டையுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஆடு, சேவல்

மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வக்கீல் சங்க தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.கே.ராமசாமி முன்னிலை வகித்தார். கோர்ட்டு முன்பாக பெண் வக்கீல்கள் வண்ணக் கோலங்களுக்கு நடுவே பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தனர். முன்னதாக கொம்பு வாத்தியம் மற்றும் தாரை தப்பட்டை வாத்தியங்கள் முழுங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

பொங்கல், கரும்புகள்

பின்னர் கிராமங்களில் நடப்பது போலவே 2 ஆட்டுக்கிடாக்கள், 2 சேவல்களுக்கு இடையே தனித்தனியாக போட்டி நடந்தது. இதனை பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆடுகளை வக்கீல் சங்க பொருளாளரான ஜெய்கிந்துபுரத்தை சேர்ந்த வக்கீல் சிவமுருகன் வளர்த்து வருகிறார். சேவல்களை வக்கீல் ராஜகோபாலுக்கு சொந்தமானவை.இதில் ஆடுகள் ஒன்றை ஒன்று ஆவேசமாக முட்டித்தள்ளின. சேவல்கள் போட்டி போட்டு எதிரியை கொத்தியது. இதனை அனைவரும் பலத்த கரகோஷத்துடன் பார்த்து ரசித்தனர். பின்னர் வக்கீல் சங்கம் சார்பில் விழாவில் கலந்து கொண்ட நீதிபதிகள், கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள், வக்கீல்களுக்கு பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன.

விழாவில் நீதிபதிகள் ராஜசேகரன், தனராஜ், பூபாலன், தாரணி, சின்னராஜ் மற்றும் மாஜிஸ்திரேட்டுகள் சுஜாதா, உமா மகேஸ்வரி, ஆஷா கவுசல்யா சாந்தினி, ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, முத்துக்குமரன், கதிரவன் மற்றும் அரசு வக்கீல்கள் லிங்கதுரை, அன்புசெல்வன், பொன்.செல்வன், வக்கீல்கள் நெடுஞ்செழியன், முத்துக்குமார், வெங்கடேசன், மோகன்தாஸ், சங்கரநாராயணன், ரமேஷ், கருணாநிதி, அருண்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.