Pages

Wednesday, December 1, 2010

சிறுத்தை புலியை கொன்ற 2 பேர் கைது

ஆசனூர் வனப்பகுதியில் விஷம் வைத்து சிறுத்தை புலியை கொன்ற 2 பேர் கைது

பவானிசாகர், டிச. 1-
http://dailythanthi.com/article.asp?NewsID=610844&disdate=12/1/2010&advt=2

ஆசனூர் வனப்பகுதியில் விஷம் வைத்து சிறுத்தை புலியை கொன்றதாக 2 பேரை வன பாதுகாப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.

சிறுத்தை புலி மர்ம சாவு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் வனப்பகுதிக்குட்பட்ட கேர்மாளம் மேற்கு வனப்பகுதியில் ஒரு சிறுத்தைப்புலி செத்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து, ஈரோடு மண்டல வன பாதுகாவலர் அருண் உத்தரவின்பேரில், மாவட்ட வன அதிகாரி 
(சத்தியமங்கலம்) சதீஷ் மேற்பார்வையில் வன பாதுகாப்பு ரோந்து படை ரேஞ்சர் சிவமல்லு தலைமையில் வனவர் உதயராஜ், வனகாப்பாளர்கள் கவிராஜ், ராஜண்ணா, பழனிச்சாமி, வனகாவலர் சம்பத் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விரைந்து சென்று சிவா இறக்க பள்ளத்தில் செத்துக்கிடந்த சிறுத்தை புலியை பார்வையிட்டனர்.

அது 4 வயது ஆண் சிறுத்தை புலி ஆகும். அதை யாரோ சிலர் விஷம் வைத்து கொன்று இருப்பது தெரிய வந்தது. அதே இடத்தில் சிறுத்தை புலிக்கு பிரேத பரிசோதனை நடந்தது. அதைத்தொடர்ந்து வன பாதுகாப்பு படையினர் தீவிர புலன் விசாரணை நடத்தி வனப்பகுதியில் மாடு மேய்க்கும் பத்திரிபடுகை கிராமத்தை சேர்ந்த பெரிய மாதன் (வயது 35), சிவசாமி (20) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விஷம் வைத்து கொன்ற 2 பேர் கைது

அதில், பெரியமாதனின் மாட்டை கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சிறுத்தை புலி அடித்து கொன்றுவிட்டதால், அவரும் அதே ஊரைச்சேர்ந்த சிவசாமி (20) என்பவரும் சேர்ந்து இறந்த மாட்டின் உடலில் விஷம் வைத்து அந்த சிறுத்தைப்புலியை கொன்று இருப்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து 2 பேரையும் வன ரோந்து படையினர் கைது செய்து வழக்கு தொடர்ந்து உள்ளனர்.