Pages

Friday, April 22, 2011

மானை கூறு போட்ட கும்பல் கைது : 40 கிலோ கறி, தோல் பறிமுதல்


பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011,22:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=229581

ராஜபாளையம் : மேற்கு தொடர்ச்சி மலையில் புள்ளிமானை வேட்டையாடிய கும்பலை ராஜபாளையம் வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கும்பலிடம் இருந்து கொம்புடன் கூடிய தலை, 40 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டன. ராஜபாளையம் பகுதியில் சேத்தூர் அசையாமணி விலக்கு அருகே ரேஞ்சர் ரவீந்திரன் தலைமையில் நேற்று வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதிகாலை 3.30 மணிக்கு சைக்கிளில் தூக்குவாளியுடன் சென்ற நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணான பதிலளித்தனர். தூக்குவாளியில் மான்கறி வைத்திருந்தனர். அவர்கள் தந்த தகவல்படி, சேத்தூர் மலையடிவார பகுதிக்கு ரேஞ்சருடன், சிறப்பு அதிரடிப்படை அதிகாரி கார்த்திகேயன் குழுவினர் சென்றனர். அங்கு மான் தலை, தோல், கறியுடன் இருந்த இருவர் பிடிபட்டனர். வேட்டையில் ஈடுபட்டதாக அம்மையப்பபுரம் காசி(55), தொந்தியப்பன்(26), பிள்ளையார்(47), மல்லையசாமி(24), மாரியப்பன்(52), அய்யனப்பன்(30) ஆகியோரை கைது செய்தனர்.

ரேஞ்சர் கூறியதாவது: நாய்களை வைத்து மானை வேட்டியாடிய கும்பலிடம் இருந்து, 40 கிலோ மான்கறி, கொம்புடன் கூடிய தலை, தோல், நான்கு மொபைல்போன்கள் கைப்பற்றப்பட்டன. மலைப்பகுதி மட்டுமின்றி அடிவாரத்தில் உள்ள பட்டா நிலங்களையும் கண்காணித்து வருகிறோம். வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.