Pages

Saturday, February 19, 2011

சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து பொது ஏலம் விடப்படும் கமிஷனர் பால்சாமி எச்சரிக்கை


சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து பொது ஏலம் விடப்படும்
கமிஷனர் பால்சாமி எச்சரிக்கை

திருச்சி, பிப்.19-
http://dailythanthi.com/article.asp?NewsID=628350&disdate=2/19/2011&advt=2

திருச்சியில் சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் ஆடு-மாடுகளை பிடித்து பொது ஏலம் விடப்படும் என மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலை மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்று சுற்றி திரியும் ஆடு, மாடு மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக போலீஸ் துறை, தீயணைப்பு துறை, வனத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் கேட்பாரற்று சுற்றிதிரியும் ஆடு, மாடு மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுப்பதும் குறித்தும், சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடிய பன்றி களை அப்புறப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

சட்டப்பூர்வ நடவடிக்கை

அதன்படி திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் தெருக்கள் சந்தைகள் மற்றும் பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடைïறு விளைவித்து சற்றி திரியும் கால்நடைகளான ஆடுகள், மாடுகள், நாய்கள், குதிரைகள் மற்றும் கழுதைகளை போலீசார், தீயணைப்பு துறை, வனத்துறை பணியாளர்கள் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்களை கொண்டு மேற்படி கால்நடைகளை பிடித்து அன்றைய தினமே பொது ஏலம் விடப்படுவதோடு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது நீதிமன்ற மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

எனவே ஒருவார காலத்திற்குள் பொது இடங்களில் சுற்றி திரியும் பன்றிகள், ஆடுகள், மாடுகள், நாய்கள், குதிரைகள் மற்றும் கால்நடைகளை அவரர்கள் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. தவறினால் கால்நடைகளை பொது ஏலம் விடப்படும் என கமிஷனர் பால்சாமி தெரிவித்தார்.

அதிகாரிகள்

கூட்டத்தில் நகர் நல அலுவலர் டாக்டர் கே.சி.சேரன், போலீஸ் உதவி கமிஷனர் (போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு) ரவீந்தரன், தீயணைப்பு துறை அலுவலர் பிச்சைமணி, வனத்துறை அலுவலக ரேஞ்சர் சார்லஸ் ஸ்டீபன், உதவி ஆணையர் (பணிகள்) தயாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.