Pages

Wednesday, February 2, 2011


பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் 35 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி ஆர்.டி.ஓ. கூட்டத்தில் முடிவு

பழனி, பிப்.2-
http://dailythanthi.com/article.asp?NewsID=624519&disdate=2/2/2011&advt=2

பழனி அருகே நெய்க்கா ரப்பட்டியில் 35 நிபந்த னைகளுடன் ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பெரியகலை யம்புத்தூரில் வருகிற 6-2-2011 அன்று ஜல்லிக்கட்டு நடத்தப் படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பழனி ஆர். டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பழனி துணை போலீஸ் சூப் பிரண்டு பாண்டியராஜன், தாசில்தார் குணசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாபுஜி, அரசு மருத்துவமனை டாக்டர் பூங்கொடி, சுகாதாரத் துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கந்தசாமி, தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாக்கண்ணு, பிராணிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், உறுப்பினர்கள் லோக ராஜன், பழனிச்சாமி, நெய்க் காரப்பட்டி பேரூராட்சி அலுவ லர் முருகேசன், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொடனர்.

35 நிபந்தனைகள்

கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட் டுதல் நெறிமுறைகள் படித்து காட்டப்பட்டது. அங்கீகரிக் கப்பட்ட 37 காளைகள் மற் றும் காளைகளை அடக்க அனு மதிக்கப்பட்ட 9 நபர்களை வைத்து உச்சநீதிமன்ற வழி காட்டுதல்களின்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்து வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிபந்தனைகள் விவரம் வரு மாறு;-

பெரிய வகை விழா அமைப் பாளர்கள் ரூ.5 லட்சமும், சிறிய வகை விழா அமைப்பாளர்கள் ரூ.2 லட்சமும் முன் பணம் செலு த்த வேண்டும், இதன் மூலம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கல ந்து கொள்ளும் நபர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கோ, காயங்களுக்கோ இழப்பீட் டுத் தொகை வழங்கப் படும். பங்கேற்கும் பயிற்றுவிக்கப்பட்ட காளைகள் பதிவு செய் யப்பட்டவையாக இருக்க வேண்டும். பிராணிகள் நல அமைப்பு சங்கத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கு நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

மத்திய பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்து தகுதியானது என சான்றளிக் கப்படும் காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். காளைகளின் பிறப்பு உறுப்பு களில் மிளகாய் பொடி தூவு தல், வேறு சக்தி பிறவற்றைக் கொண்டு பூச்சு செய்து வெறுப் பூட்டவோ, வெறிïட்டவோ கூடாது. ஒரு காளையினை 4 நபர்களுக்கு மேல் அடக்க முய ற்சி செய்யக்கூடாது.

காளைகளை விரட்டி அட க்க முயலும் வீரர்களுக்கு போதுமான இட வசதி இருக் கும் வகையில் களம் இருக்க வேண்டும். அனைத்து காளை களையும் ஒரே சமயத்தில் விடக்கூடாது. ஒவ்வொரு காளைக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்க வேண்டும். போட் டியின் போது காளைகள் காயம்பட்டால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் ஏற்படுத்த வேண்டும். பங்கேற்கும் வீரர்கள் காயம்பட்டால் சிகிச்சை அளிக்க அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

மரக்கவசம்

மாடுகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டு இருந்தால் கூர்மையான பகுதிக்கு மரக்கவசம் அமைக்க வேண்டும். விளை யாட்டுத் திடலுக்கும், பார் வையாளர்கள் அமரும் இடத்திற்கும் இடையே போதுமான இடைவெளி இருத்தல் வேண்டும். விளை யாட்டில் பங்கேற்கும் நபர் போதைப்பொருள், ஊக்க மருந்து உட்கொண்டிருக்க கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் வருவாய்த்துறையினரிடம் பதிவு செய்து அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஜல்லிக் கட்டு முழுவதையும் வீடியோ எடுக்க வேண்டும். மிருக வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறாமல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். பங்கேற்க வரும் காளைகளுக்கு போதிய உணவளித்து தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 35 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூட்ட முடிவின் அடிப்படையில் பழனி ஆர்.டி.ஓ. மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளி த்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த முறையான அனுமதி பெறப்பட்டு நிகழ்ச்சி நடத்தப் படும்.