Pages

Sunday, August 2, 2015

வனவிலங்குகளை கண்காணிக்க குட்டி விமானங்கள்



கோல்கட்டா: மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி படையெடுக்கும் மிருகங்களை கண்காணிக்க ஆளில்லா குட்டி விமானங்கள் எதிர்காலத்தில் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்குகள் கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது காடுகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்கு உணவுத் தேவைக்காக யானைகள், கரடிகள், புலிகள் போன்ற விலங்குகள் இடம் பெயர்வது வாடிக்கையாகி விட்டது. இவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆளி்ல்லா குட்டி விமானங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று இந்திய வனவிலங்கு கல்வி நிறுவன ஆராய்ச்சியாள்ர்கள் தெரிவிக்கிறார்கள்.

காடுகளை அடுத்துள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் யானை அல்லது புலி போன்ற விலங்குகளின் நடமாட்டம் தங்களது கிராமத்திற்கு அருகே இருப்பதை உறுதி செய்தால், விலங்குகளின் இருப்பிடத்தை ஆளில்லா குட்டி விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் சாதனம் மற்றும் காமிராக்கள் மூலம் துல்லியமாக அறிய முடியும் என இந்திய வனவிலங்கு கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அவ்வாறு வனவிலங்குகளின் இருப்பிடம் துல்லியமாக கண்டறியப்படும் போது, அவற்றை திருப்ப காட்டுக்குள் விரட்டி விட வனத் துறையினருக்கு உதவியாக இருக்கும் என மேலும் தெரிவித்தனர்.

இதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை பயமுறுத்தும் யானைகள், புலிகள் மற்றும் கொடிய வனவிலங்குகளிடமிருந்து கிராம மக்களை பாதுகாத்து, வனவிலங்குகளை குறுகிய காலத்தில் காட்டிற்குள் விரட்டியடிக்க முடியும் என நம்பிக்கை .தெரிவித்தனர்.

News Courtesy:

http://www.dinamalar.com/news_detail.asp?id=1309442