Pages

Friday, August 13, 2010

மாடுகளை வெட்டுவது குறித்து புகார்

மாட்டிறைச்சி கடைகளில் ரெய்டு : நகராட்சியினரின் அதிரடி

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2010,23:13 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51809


ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் கடைகளில், அறுக்க முயன்ற மாடுகளை நகராட்சியினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் நகராட்சியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பல இடங்களில் மாட்டிறைச்சி கடைகள் இருப்பதும் பகிரங்கமாக மாடுகளை வெட்டுவதும் குறித்து புகார் எழுந்தது. நகராட்சி சுகாதார அதிகாரி சந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹரிதாஸ் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை நான்கு மணி முதல் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். ஹாஜா பேலஸ் அருகே ஒரு கடையில் மாட்டிறைச்சிக்காக மாடு வெட்டியபோது, இறந்த நிலையில் இருந்த மாட்டை பறிமுதல் செய்தனர். மேலும் பதுபஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரங்களில் ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆடுகளை வெட்டுவதற்கு தனி இடம் (ஆடடிசாலை) உள்ள நிலையில், அக்ரஹாரம் ரோடு போன்று நகரில் பல இடங்களில் ரோட்டில் பகிரங்கமாக ஆடுகளையும் வெட்டுவதை காணமுடிகிறது. சில இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் கழிவுநீர் கால்வாயில் ஆடுகளை வெட்டுவதும், தவறி கால்வாயில் விழும் கறிகளை எடுத்து கழுவி மீண்டும் விற்பனை செய்வதுமாக உள்ளனர். வெட்டவெளியில் ஆடுகளை வெட்டுவதால் அதன்கழிவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக திரிகின்றன. கறிசண்டையில் நாய்களின் பிடியில் சிறிய குழந்தைகள் மாட்டும் அபாயமும் உள்ளது. மாட்டிறைச்சி வெட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள் இதுபோன்ற திறந்த வெளியில், கழிவுநீர்கால்வாய் பகுதியில் ஆடுகளை வெட்டுவதை தடுக்கவும் முன்வரவேண்டும்.

தொற்று நோய் அபாயத்தில் ரோட்டோர கடைகள் : இறைச்சி கடைகளில் சரியான முறையில் அனுமதியுடன் வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறதா? மாலை நேர சிக்கன், சூப் கடைகளில் சுகாதாரமான முறைகளில் தயார் செய்து விற்கின்றனரா? இதன்மூலம் தொற்று நோய் பரவுமா என்பதை நகராட்சி சுகாதார துறையினர் நன்கு ஆய்வு செய்ய வேண்டும். விபரீத சம்பவங்கள் ஏற்படாவண்ணம் இருக்க ரோட்டோர ஓட்டல்களில் தொடரந்து அதிரடி சோதனை மேற் கொள்ளவேண்டும்.


dinamalar online edition