Pages

Monday, March 21, 2011

சிட்டுக்குருவி எண்ணிக்கை குறைவால் உணவு உற்பத்தியில் பாதிப்பு


பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011,01:42 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=209759

பழநி : சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைய, குறைய உணவு உற்பத்தியும் குறையும் என, சிட்டுக்குருவி தினத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.பழநி மலை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் அக்ஷயா கலையரங்கில் "குருவிகள் தினம்' கொண்டாடப்பட்டது. பழநி மலை பாதுகாப்பு மன்ற தலைவர்கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சதாசிவம், செயற்குழு உறுப்பினர் அருட்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.இங்கு பேசியவர்கள் குறிப்பிட்ட விபரங்கள்: 

60 கோடி மொபைல் போன்கள் உள்ளன. இதற்காக 5 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்படும் மைக்ரோ வாய்ஸ் அதிர்வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன. சிட்டுக்குருவி, தேனீ உள்ளிட்டவை அழிந்து கொண்டே வருவதால், அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும், சிட்டுக்குருவிகளுக்கு விஷமாக மாறி, அவைகள் உயிரிழக்க நேரிடுகிறது.தொடர்ந்து கட்டப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததாலும் அவற்றின் இருப்பிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்க மரத்தாலோ, மூங்கிலாலோ அல்லது மண் கலசங்கள் மூலமாகவோ சிட்டுக்குருவிகளின் கூடுகளை செய்து ஜன்னல் அல்லது நிழல் தட்டி போன்ற இடங்களில் தொங்க விட வேண்டும். சிட்டுக்குருவிகள் எங்கு தென்பட்டாலும் அவற்றிற்கு தானியங்கள் மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும்.சிட்டுக்குருவி ஜோடிகள் தென்பட்டால் அவற்றின் செயல்பாடுகளை, உணவு முறையை, முட்டையிடுவதை கண்காணிக்க வேண்டும். வேளாண்மைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க, விழிப்புணர்வு முயற்சிகளையோ அல்லது சரியான அறிவுரைகளையோ வழங்க வேண்டும்.


Thursday, March 17, 2011

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு


அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: மேலூரில் காளை முட்டி வாலிபர் பலி

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2011,17:02 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=207509

மேலூர் : மேலூரில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு ந‌டத்தப்பட்டதில் இளைஞர் ஒருவர் காளை முட்டி வாலிபர் ஒருவர் பலியாகினர். மேலூர்அம்பலகாரன்பட்டி கோயில் திருவிழாவில் இன்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட இளைஞர்களில் ஜனார்தனன் (25) காளை முட்டி பலியானார். தனுஷ்கோடி படுகாயமடைந்தார்.

Saturday, March 12, 2011

வனவிலங்குகள் கணக்கெடுப்பு


மேட்டுப்பாளையம்-சிறுமுகை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது 175 ஊழியர்கள் ஈடுபட்டனர்

மேட்டுப்பாளையம், மார்ச்.13-
http://dailythanthi.com/article.asp?NewsID=632886&disdate=3/13/2011&advt=2

மேட்டுப்பாளையம்- சிறுமுகை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் 175 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கணக்கெடுக்கும் பணி

கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட கோவை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, புள்ளிமான், கடமான், காட்டெருமை, செந்நாய், கரடி, சிறுத்தை மற்றும் பிற வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில், அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம் போல இந்த ஆண்டு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

175 பேர் ஈடுபட்டனர்

கோவை மண்டல வனப்பாதுகாவலர் கந்தசாமி, மாவட்ட வனஅலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் மொத்தம் 175 பேர் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் தன்னப்பன் தலைமையில் வனவர்கள் சீனிவாசன், சடையப்பன், மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், வனஉயிரின ஆர்வலர்கள் உள்பட 72 பேர், ஒரு குழுவிற்கு 8 பேர் வீதம் 9 குழுக்களாக பிரிந்து ஜக்கனாரி, உளிக்கல், கல்லாறு, சுண்டப்பட்டி, கண்டிïர், நெல்லிமலை ஆகிய வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர்குட்டைகள், நீர் நிலைகள், நீரோடைகளில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

சிறுமுகை வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் தினேஸ்குமார் தலைமையில் வனவர்கள் ராஜ்கபூர், சசிகபூர் மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்புக்காவலர்கள், வனஉயிரின ஆர்வலர்கள் உள்பட 60 பேர், ஒரு குழுவிற்கு 5 பேர் வீதம் 12 குழுக்களாக பிரிந்து, ஓடந்துறை, குஞ்சப்பனை, பெத்திக்குட்டை, கூத்தாமண்டி, காந்தவயல் ஆகிய வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கணக்கெடுக்கும் பணி நடத்தினார்கள். காலை 6 மணிக்கு தொடங்கிய பணி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இன்று (13-ந்தேதி) வனப்பகுதியில் வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியும் வனவிலங்குகள் என கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.


Friday, March 11, 2011

புள்ளிமான் குட்டி மீட்பு


கல்பாக்கம் அருகே சேற்றில் சிக்கி தவித்த புள்ளிமான் குட்டி மீட்பு வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்க ஏற்பாடு

சென்னை, மார்ச்.11-
http://dailythanthi.com/article.asp?NewsID=632647&disdate=3/11/2011&advt=2

கல்பாக்கம் அடுத்துள்ள பரசநல்லூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் பிரபாகரன், கவுதமன் ஆகியோர் நேற்று காலை பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றனர். வழியில் சேற்றில் ஆட்டுக்குட்டி போன்ற தோற்றம் கொண்ட விலங்கு சிக்கிக்கொண்டு மீள முடியாமல் கதறிக் கொண்டிருப்பதை பார்த்தனர். உடனடியாக சேற்றில் இறங்கி அதை மீட்டு தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்ததில் அது புள்ளிமான் குட்டி என தெரியவந்தது.

பின்னர் இது குறித்து வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய் ஆய்வாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராணி, திருப்போரூர் வனசரகர் எம்.மூர்த்தி மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மான்குட்டியை பார்வையிட்டனர்.

வனசரகர் மூர்த்தி கூறுகையில், ``பிறந்து ஒன்றரை மாதமேயான சுமார் 2 அடி உயரமுள்ள இந்த அழகிய ஆண் புள்ளிமான் குட்டி வழிதவறி வந்துள்ளது. இது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்படும்'' என்றார்.


Wednesday, March 2, 2011

பிடிபட்ட சிறுத்தை பலி


பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011,22:40 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=196962

பந்தலூர் : பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிதர்காடு சந்தக்குன்னு பகுதியை சேர்ந்த நிஷாத் என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் சிறுத்தை புகுந்தது. இது குறித்து பிதர்காடு வனச்சரகர் நாகலிங்கம், புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ்ஸ்ரீவத்சவா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் கலைவாணன் சம்பவ இடத்துக்கு வந்த மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மயக்கமடைய செய்தார். பின்னர் தெப்பக்காடு பகுதிக்கு சிறுத்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு காயமடைந்த சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுத்தை நேற்று காலை உயிரிழந்தது.