08.12.2024ChennaiAWFTP-PR-201-D18chairman.awftp@gmail.comHelpline:
9 487 487 000
விலங்குகள் நல கூட்டமைப்பு தமிழ் நாடு, புதுச்சேரி
பெறுநர்:
மாவட்ட
ஆட்சியர் அவர்கள்
கடலூர்
மாவட்டம்
தமிழ் நாடு.
வணக்கம்.
இந்த கூட்டமைப்பு வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள்,
தெருவோரம் அநாதையாக வாழும் விலங்குகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் செயல்பட்டு வருகின்றது.
பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை / கெடிலம் ஆற்று வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்பட்டு கடலில் உயிருக்கு ஐந்து நாட்களுக்கு போராடிய துயரச் செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாக அறியப்பட்டோம்.
# இச்செய்தி குறித்து
மாவட்ட நிர்வாகம் இவ்உயிர்களை
காப்பாற்ற
எடுத்த நடவடிக்கைகள் என்ன
.?
# மேலும் இது
போன்ற பேரிடர்களில் இருந்து
மனிதர்களை
சார்ந்து
வாழும் விலங்குகளை காப்பாற்ற
என்னென்ன
நடவடிக்கைகள்
மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது
.?
இது குறித்த வெள்ளை அறிக்கை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு
தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.
அனைத்து ஜீவராசிகளுக்குமானது.
விலங்குகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக,
Hn.ஜெரால்டு Hn. அண்ணாதுரை -
தலைவர் துணைத்தலைவர்
விலங்குகள் நல கூட்டமைப்பு தமிழ் நாடு - புதுச்சேரி
குறிப்பு: ஊடகச் செய்திகள் இணைக்கப்பட்டுள்ளது.