Pages

Saturday, March 31, 2012

சேற்றில் சிக்கி பலியான யானையை தேடி அணையை சுற்றிவரும் குட்டி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=438699
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2012,23:33 IST

உடுமலை: உடுமலை அமராவதி அணை சேற்றில் சிக்கி பலியான பெண் யானையின் குட்டி, தாயைத் தேடி அணைப் பகுதியைச் சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த பாசப் போராட்டத்தை பார்த்த பொதுமக்கள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணையில், கடந்த 29ம் தேதி பிற்பகல், குட்டியுடன் தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை, சேற்றில் சிக்கியது. யானையை மீட்கச் சென்றபோது, யானைக்குட்டி வனத்துறையினரை விரட்டியது. பின்னர், யானைக்குட்டி வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் பலனில்லாமல் யானை இறந்தது. இந்நிலையில், தாய் யானையை தேடி, குட்டி யானை, அமராவதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. தாய் யானை இறந்த கோம்பு பீட் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக, யானைக்குட்டி தொடர்ந்து சுற்றி வருகிறது. கூட்டத்திலிருந்து பிரிந்து வந்துள்ள யானைக்குட்டி, அணைப்பகுதியில் தண்ணீர் அருந்தி விட்டு, அருகிலுள்ள புல்வெளியில் மேய்கிறது; தொடர்ந்து பல மணி நேரம், ஒரே இடத்தில் நின்ற படி உள்ளது. மாலை நேரத்தில், யானைகள் கூட்டம், அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் போதும், அவற்றுடன் யானைக்குட்டி செல்லவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும், வனத் துறையினர், கண்காணிப்பு பணிகளை துவக்கினர். இறந்து போன தாய் யானையைத் தேடி, குட்டி யானை நடத்தி வரும் பாசப் போராட்டம், அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. வனப்பகுதிக்குள் குட்டி யானை, தானாகச் செல்லும் வரை அதை விரட்டும் திட்டம் ஏதுமில்லை என்று வனத்துறையினர் கூறினர்.

Friday, March 23, 2012

கூடைக்குள் சிக்கிய, குறும்புக்கார குரங்கு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=433218
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012,23:20 IST

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே, செங்காளிபாளையத்தில் துரத்தி, துரத்தி கடித்த குரங்கை, பொதுமக்கள் கூடையில் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த வாரம், நரசிம்மநாயக்கன்பாளையம், டீச்சர்ஸ் காலனியில், ஒரு குட்டியுடன், நான்கு குரங்குகள், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி, சுற்றி வந்தன. ஆட்கள் இல்லாத வீடுகளின், ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, உணவுப் பண்டங்களை எடுத்து, தின்று சேதப்படுத்தின.

துரத்த வரும், பொதுமக்களை குரங்குகள் கடிக்க பாய்ந்ததால், பொதுமக்கள் ஓடினர். சில நாட்களுக்கு முன், ஒரு வழியாக, இந்த நான்கு குரங்குகளையும், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து துரத்தினர். இக்குரங்குகள், இடிகரையில் இருந்து, துடியலூர் செல்லும் வழியில் உள்ள, செங்காளிபாளையம் கிராமத்துக்குள் நுழைந்தன. இங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்து, உணவு பண்டங்களை சேதப்படுத்தின. இது குறித்து, பொதுமக்கள், பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கூண்டு, கைவசம் இல்லாததால், குரங்கை பிடிக்க தாமதம் ஏற்பட்டது. அருகில் உள்ள காட்டுப்பகுதியில், சுற்றித் திரிந்த குரங்குகள், நேற்று முன்தினம் மாலை, மீண்டும் செங்காளிபாளையம் கிராமத்துக்குள், புகுந்தன. அங்கு, விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த், 4, என்ற சிறுவனின் காலை கடித்து விட்டு, தப்பியோடியது. குரங்குகளின் அட்டாகாசம் அதிகரித்ததால், பொதுமக்கள் குரங்கை பிடிக்க, முடிவு செய்தனர். தனியாக சிக்கிய ஒரு குரங்கை, கூடையால் மூடி, பிடித்தனர். பின், அதை, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். செங்காளிபாளையத்தில் சுற்றி வரும் மேலும் மூன்று குரங்களை பிடிக்கும் முயற்சியில், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tuesday, March 20, 2012

ஈரோடு அருகே தண்ணீர் தேடி வந்த மான் நீரில் மூழ்கி பலி


http://tamil.oneindia.in/news/2012/03/21/tamilnadu-thirsty-deer-gets-drowned-a-well-aid0128.html
புதன்கிழமை, மார்ச் 21, 2012, 7:53 [IST]

ஈரோடு: ஈரோடு அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது சேர்வராயன் என்னும் கிராமம். அந்தியூர் வனப்பகுதியில் இருந்து 5 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் அந்த கிராமத்திற்கு தண்ணீர் தேடி வந்தது. அது அங்குள்ள முருகன் கோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த அந்த கிரமாத்து இளைஞர்கள் சிலர் மானைக் காப்பாற்ற கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். ஆனால் அதற்குள் அது நீரில் மூழ்கி இறந்தது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ஈரோடு மாவட்ட வன அதிகாரி ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானின் உடலை கைப்பற்றினார். பின்னர் அந்த இடத்திலேயே அதை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார். 

அழகான புள்ளிமான் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Thursday, March 15, 2012

Dog shelter proposal fails to find favour with animal rights activists


TNN | Mar 15, 2012, 04.34AM IST
http://timesofindia.indiatimes.com/city/chennai/Dog-shelter-proposal-fails-to-find-favour-with-animal-rights-activists/articleshow/12270459.cms

CHENNAI: The Corporation of Chennai's proposal to set up a shelter to take stray dogs off the streets has drawn criticism from animal welfare activists as it is against the Animal Birth Control (Dogs) Rules of 2001. "Stray dogs have to be sterilised and released in the same area according to the Animal Birth Control (ABC) rules, drawn up under the Prevention of Cruelty to Animals Act, 1960," said Chinny Krishna, vice chairman, Animal Welfare Board of India. 

"So they cannot be removed from the street and put in shelters." But officials say a shelter is the best way to curb the stray dog population. "We plan to set up a shelter that will house a minimum of 2,000 dogs. The aim is to remove stray dogs from streets and give them a home," said corporation commissioner P W C Davidar. "We have just made the announcement. The next step is to plan the shelter and identify the location."

Funds have not yet been allocated for the project, but it will not be capital intensive, he said. However, animal welfare activists said that setting up a shelter will not curb the stray dog population. According to official estimates, there are about 30,000 stray dogs within the old corporation limits. The number of stray dogs in any area is directly proportional to the availability of food, said Sathya Radhakrishnan, honorary joint secretary of Blue Cross. 

"If you remove dogs from one area, other dogs will come in," he said, adding that the only solution is strengthening the ABC programme. Such shelters have not been a success in other countries. "Similar projects have been tried out unsuccessfully in Taiwan, the US and many parts of eastern Europe," said Krishna. Shelters cannot house large numbers of dogs. "If the animals are kept in single kennels, they become unfriendly to human beings," he said. 

"If more than 15 or 20 dogs are kept together in open areas, they begin to display pack behaviour and attack each other." However, corporation officials say they have a viable plan. "We will put the animals in separate pens in numbers that are easy to handle," said Davidar, adding that they plan to implement the proposal before the next budget. "We have received positive feedback for our proposal from people living in areas that face stray dog menace." Animal activists do feel the shelter would be useful for pets that are abandoned. "The owners can instead leave them at the shelter," said Krishna. "The shelter can also rescue pups from streets and re-home them."

Friday, March 2, 2012

கோடை வெயிலை சமாளிக்க யானைகளுக்கு "ஷவர்'


பதிவு செய்த நாள் : மார்ச் 03,2012,01:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=418132

வண்டலூர்: கோடையை சமாளிக்கும் வகையில், வண்டலூர் பூங்கா யானைகள் இருப்பிடத்தில், இரண்டு, "ஷவர்கள்' அமைக்கப்பட்டுள்ளன.

வண்டலூர் உயிரியல் பூங்காவில், 20 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் இருப்பிடம் உள்ளது. இது, நாட்டில் உள்ள பூங்காக்களில் மிகப்பெரியதாகும். இங்கு ஆறு யானைக் குட்டிகள், ஒரு பெண் யானை என மொத்தம் ஏழு யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், கோடைக் காலத்தை யானைகள் சமாளிக்கும் வகையில், அதன் இருப்பிடத்தில், இரண்டு, "ஷவர்கள்' அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று யானைகள் தங்கும் இடத்திலும், மற்றொன்று பார்வையாளர்கள் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் பகுதியில் உள்ள, "ஷவரில்' மாலை மூன்று மணி முதல் நான்கு மணி வரை அனைத்து யானைகளும் வரிசையாக நின்று, 10முறை குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் அருகே யானைகள் சேற்றுக்குளியல் குளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யானைகள்,"ஷவரில்' குளிப்பதை இனி பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

ஆட்டு ரத்தம் உறிஞ்சும் வினோத திருவிழா