Pages

Tuesday, November 2, 2010

காட்டுபன்றிகளை கொல்ல நாட்டு வெடிகுண்டு

காட்டுபன்றிகளை கொல்ல வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து அண்ணன்-தம்பி படுகாயம்

பட்டிவீரன்பட்டி,நவ.2-
http://dailythanthi.com/article.asp?NewsID=604524&disdate=11/2/2010&advt=2

காட்டு பன்றிகளை கொல்ல வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் அண்ணன்-தம்பி பலத்த காயமடைந்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாட்டு வெடிகுண்டுகள்

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவுவை சேர்ந்தவர் வேலுசாமி. இவருக்கு தாண்டிக்குடி மலையடிவாரத்தில் வண்ணாம்பாறை ஓடை அருகில் தோட்டம் உள்ளது. அங்கு கடலை,கத்தரி போன்றவற்றை பயிரிட்டு இருந்தார். அவற்றை தின்று நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக, தோட்டத்தை சுற்றி நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த வெடிகுண்டுகளை எடுத்து வேறு இடத்தில் மாற்றி வைப்பதற்காக நேற்று வேலுசாமியின் மகன்கள் பழனிசாமி(வயது 23), மாயிசாமி(21) ஆகியோர் தோட்டத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் புதைத்து வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துக்கொண்டு இருந்தனர்.

வெடித்தன

அப்போது நாட்டு வெடிகுண்டுகள் திடீரென்று வெடித்து சிதறின. இதில் பழனிசாமியும், மாயிசாமியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி சித்தரேவு கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.