விலங்குகள் நல கூட்டமைப்பு – தமிழ் நாடு,புதுச்சேரி
To
The Hon’ble Chief Justice,
High Court of Madras,
Chennai – 600104.
Subject: வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்ட
நிதி முறைகேடுகள் தொடர்பாக தனி நீதிபதி தலைமையிலான விசாரணை அமைக்க வேண்டுகோள்.
மாண்புமிகு தலைமை நீதிபதி
அவர்களுக்கு,
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய
“வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம்” தெருவோர விலங்குகளின் பாதுகாப்பு, பராமரிப்பு
மற்றும் நலனுக்காக மிக முக்கியமான அரசுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்ட
அளவிலும், உள்ளூர் அமைப்புகளுக்கும் (NGO), பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நிதி வெளிப்படைத்தன்மையுடன்
செலவிடப்படவில்லை, திட்டத்தின் முதன்மை நோக்கம் புறக்கணிக்கப்படுகிறது.
முறைகேடுகள், தவறான கணக்குகள்,
மற்றும் விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் தவறான பயன்கள் குறித்த பல புகார்கள்
தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்த நிலை தெருவோர விலங்குகளின்
அடிப்படை நலனையும், அரசு திட்டங்களின் நம்பகத் தன்மையையும் தீவிரமாக பாதிக்கிறது.
எனவே, திட்ட நிதி முறைகேடுகளை வெளிக்கொணரவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும், நீதித்துறை கண்காணிப்பின் கீழ் செயல்படவும், ஒரு தனி நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு அமைக்குமாறு மாண்புமிகு நீதிமன்றம் தலையீடு செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
இந்த நடவடிக்கை, தெருவோர
விலங்குகளின் உயிர் பாதுகாப்பையும், பொதுமக்களின் நம்பிக்கையையும், அரசுத் திட்டங்களின்
வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும்.
விலங்குகளின்
நலன் மற்றும் உரிமைகளுக்காக,
Hn.ஜெரால்டு
தலைவர்
விலங்குகள்
நல கூட்டமைப்பு தமிழ் நாடு - புதுச்சேரி
Copy to:
1. The Special Officer, Mudhalvarin Mugavari Department. Govt of Tamil Nadu, Secretariat, Chennai -600009. Email : cmcell@tn.gov.in