விலங்குகள் நல கூட்டமைப்பு – தமிழ் நாடு,புதுச்சேரி
28.07.2025
Chennai
AWFTP-PR-561-J78
chairman.awftp@gmail.com
Helpline:
9 487 487 000
பத்திரிக்கை
செய்திக்காக.
வணக்கம்.
விலங்குகள் நல கூட்டமைப்பு, 1998 முதல் தமிழ் நாடு
மற்றும் புதுச்சேரியில், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், தெருவோரம் அநாதையாக
வாழும் விலங்குகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக செயல்பட்டு வருகின்றது.
இத்தகைய சமூகம் சார்ந்த பணிகளில்
பல சவால்களும், கூடுதலான எதிர்பாராத நிகழ்வுகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக:
1. கடந்த 10 ஆண்டுகளில் தெருவோர
நாய்களின் கருத்தடைகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், இனப்பெருக்கம் அதிகரித்து வருகின்றது.
உண்மைக்கு புறம்பாக, தெரு நாய்கள் வெறி நாய்களாக மாறுவதாகவும் அவற்றை கருணை கொலை செய்வதற்கு தமிழக
அரசு உத்தரவிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள்
வெளி வருகிறது மேற்கண்ட ஊடகச் செய்திகள் உண்மை
என்றால் அதற்கான ஆவணங்களை/அரசாணையை தமிழ் நாடு
அரசு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில், பன்முகத்தன்மை
கொண்ட கால்நடை மருத்துவமனைகளும் தாலுகா வாரியாக கால்நடை மருத்துவமனைகளும் கால்நடைகளுக்கான
கிராமப்புற மருத்துவமனைகளும் உள்ளது இதில் சுமார் 2000 மருத்துவர்கள், உதவியாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இத்தனை
பெரிய கட்டமைப்பு இருந்தும், விலங்குகளை ஈவு
இரக்கமில்லாமல் கொலை செய்ய உத்தரவிடுவது விலங்குகள் உரிமைகளுக்கு
எதிரானது என்பதை வலியுறுத்துகிறோம். தெருவோர
விலங்குகள்-மனிதர்கள் மோதலுக்கான பின்புலத்தையும் பின்னணியும் நாம் ஆராய வேண்டும்.
2. வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்
திட்டத்தின் மூலம் விலங்குகள் நலனுக்காக தன்னார்வ அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட 20 கோடி அளவிலான நிதிகளில்
முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இதனால் முறையாக கருத்தடை செய்யாமல், முறையான மருத்துவ உதவி புறக்கணிக்கப்பட்டு
தெருவோர நாய்கள் உரிய தண்ணீர் இன்றி உணவின்றி அவதிக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்று
வருகிறது. தொடர்ந்து கருத்தடைகள் செய்யப்படாததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது
அனைவரும் அறிந்ததே. இந்த உண்மைக்கு மாறாக பல்வேறு செய்திகள் வாயில்லாத ஜீவன்களாகிய
நாய்களை எதிரிகளாகவும் வில்லன்களாகவும் ஊடகங்கள் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருவது
வேதனைக்குரியது.
மனிதர்கள்-விலங்குகளுக்கான
உரிமைகளை நிலை நிறுத்துவதில் தடம் பெயர்ந்து தெருவோர விலங்குகளை எதிரிகளாக காட்ட முன்னிறுத்துவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.
3. பல்வேறு இடங்களில் நாய்கள்
தான் வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உணவு கிடைக்காத மலைப் பகுதிகளில்
கொண்டு விடப்படுகிறது அல்லது கொன்று புதைக்கப்படுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
4. வெப்ப காலங்களில் தண்ணீர்
தொட்டிகள் இல்லாததால், தெருவோர நாய்கள் தாகம் தீர்க்க முடியாமல் தவிக்கின்றன.
எனவே, எங்களது கூட்டமைப்பின்
சார்பில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ் நாடு அரசுக்கு வேண்டுகோள்
விடுக்கின்றோம்:
விலங்குகள் நலன் என்ற பெயரில்
விலங்குகளுக்காக அரசு ஒதுக்கப்பட்ட பணத்தை பெற்று முறைகேடில் ஈடுபடும் அமைப்புகளை அடையாளம்
கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருவோர நாய்கள் மனிதர்களுக்கும் உள்ள பிணக்குகள் மற்றும் தொடர்பான
குறைகளை ஆய்வு செய்ய தனி குழு அமைத்தல் வேண்டும்.
மாவட்டங்களின் அளவில் திட்டமிடல்
கூட்டங்களை விலங்கு நல ஆர்வலர்கள், வல்லுனர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் கலந்தாய்வு
நடத்தி தீர்வு காண வேண்டும்.
தெருவோர நாய்கள் கருத்தடைக்கு
பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை அதிகப்படுத்துதல் மற்றும் திட்டமிட்ட கருத்தடை செயல்பாடுகள்
மேற்கொள்ளுதல் வேண்டும்.
மாவட்டந்தோறும் கண்காணிப்பு
குழுக்களை அமைத்தல் வேண்டும்.
வெப்ப காலங்களில் தெருக்களில்
தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும்.
விலங்கு நல அமைப்புகளை ஒருங்கிணைத்து,
விரிவான செயல் திட்டம் மற்றும் கொள்கை வடிவமைத்தல் வேண்டும்.
மேற்கண்ட முன்மொழிவுகள் அனைத்தும்
செயல்படுத்தப்பட்டால், விலங்குகளுக்கும் மனித சமூகத்துக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை
தவிர்க்க முடியும்.
தங்கள் கருணை மற்றும் நியாயமான
நடவடிக்கையை எதிர்நோக்குகிறோம்.
நன்றி.
இந்தப் பிரபஞ்சம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல
அனைத்து உயிர்களுக்குமானது.
விலங்குகளின் உயிரை காக்க ஒன்றிணைவோம்...!
விலங்குகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக,
தலைவர் -
ஜெரால்டு / துணைத் தலைவர் - அண்ணாதுரை
விலங்குகள் நல கூட்டமைப்பு தமிழ் நாடு- புதுச்சேரி