Pages

Sunday, September 8, 2024


 இரக்கமற்ற பாதிரியார்.

 

இன்று மாலை 7 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்திற்கு சென்றேன். எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளுக்கும் கடவுளுக்கு நன்றி கூறி வெளியே வந்தேன் .

 ஏறக்குறைய 200 பேர் கோயில்வளாகத்தில் இருந்தனர்.வீடில்லாத ஒரு நாய் கோயிலுக்கு வெளியே மனிதர்களோடு ஆழ்ந்து தூங்கிட்டிருந்தது.

கோயிலுக்கு வெளியே அந்த நாயை பார்த்து முறைத்துக்கொண்டு வெள்ளை அங்கியுடன் நடந்து சென்ற பாதிரியார் காவலாளியை அழைத்து அதை துரத்தச் சொன்னார் .

 70 வயது மதிக்கத்தக்க,  காவலாளிக்கு எந்த தகுதியும் இல்லாத அந்த கிழவன் ஒரு மரக்கட்டையை எடுத்துவந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த நாயின் நடு வயிற்றின் மீது தன்னால் முடிந்த பலத்துடன் அடித்தார். வலிதாங்காத அந்த நாய் அழுதுகொண்டே ஓடியது .

 இதை சற்றும் எதிர்பாராத நான் அந்த காவல் கிழவனிடம் கேட்டதற்கு " எனக்கு சம்பளம் தருபவர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன் என்றார்".

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொன்ன இயேசு பிரானின் போதனைகளை மக்களுக்கு போதிக்கும் இந்த பாதிரியார் சற்றும் இரக்கமற்றவர்

 

தெருவோரம் வாழும் வீடில்லாத அநாதை விலங்குகளை இரக்கமின்றி துன்புறுத்தும் இந்த பாதிரியாரை மன்னியுங்கள் இயேசுவே.


-Jerold


 

இயற்கை நலன்,விலங்குகளின் நலன் பேசுபவர்கள்

அதற்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள்

சமூக விரோதிகளா.? குற்றவாளிகளா.?

  

08.09.2024
Chennai
AWFTP-PR-647-F44
chairman.awftp@gmail.com
Helpline:  9 487 487 000

 

To

 The Chief Secretary,

Govt. of Tamil Nadu,

Secretariat, Chennai-600009.


உயிர்நேயம் முற்றிலுமாக குறைந்து வரும் இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் விலங்குகள் நலனில் அக்கறையும், பரிவும் கொண்டு அவற்றின் நலன் மற்றும் உரிமைகளுக்காக தங்கள் வாழ்நாள்களின் பெரும் பகுதியையும், பெரும் பணத்தையும் செலவு செய்து வருபவர்களை குற்றவாளிகளாக சமூகத்தாலும், அரசு அதிகாரிகளாலும், ஊடகங்களாலும் சித்தரிக்கப்படுவதும், கொடுமைப் படுத்தப்படுவதும்  நாளுக்கு  நாள் அதிகரித்து வருகின்றது .

இந்த சமூகப் பிரச்சனையை நாம் கீழ்க்கண்ட கேள்வியில் இருந்து அணுக வேண்டும் .

 

1. தெருவோர அநாதை விலங்குகள் உருவாக யார் காரணம் ?

தெருவோர விலங்குகள் உருவாக முக்கிய காரணங்களில் ஒன்று விலங்குகள் நலன் பேசும்  போலி   NGO க்கள்.

2. தெருவோர நாய்கள் பிறப்பு கட்டுப்பாடுக்கு (Animal Birth Control)  ஒதுக்கப்பட்ட பணத்தை மாநகராட்சி முதல் பஞ்சாயத்து வரை எவ்வித முறைப்படுத்தலுமின்றி போலி கணக்குகளை எழுதி அரசை ஏமாற்றுவதும் தான் காரணம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏறக்குறைய அனைத்து கிராமங்களிலும் கால்நடை மருத்துவமனைகள்  உள்ளது.

ஆனால்  இந்த மருத்துவமனைகளில் தெருவோர  விலங்குகளின்  மருத்துவம் புறக்கணிக்கப்படுகின்றது. தடுப்பூசிகள் முறையாக கண்காணிக்கப்படாமல்  தனியாருக்கு  விற்கப்படுகின்றது.

பேரூராட்சிகளில் உள்ள  கருத்தடைக்காக பயன்படுத்தப்படும்  நாய்கள் பயண வாகனம் குப்பைகளை அள்ள பயன்படுத்தப்படுகின்றது .

பெரும்பாலான கிராம கால்நடை மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் அரசு  நிர்ணயித்த  நேரத்தில்  இருப்பதில்லை.

இவ்வாறு அரசு திட்டங்கள் முறையாக விலங்குகளின் நலனுக்காக பயன்படுத்தாமல் இருக்கும் அரசு நிர்வாகமும், அரசு நிதியை பெற்று அதை குறைந்த அளவு கூட தெருவோர விலங்குகளின் நலனுக்கு பயன்படுத்தாத NGO-க்களும் தான் தெருவோர விலங்குகள் அதிகரிக்கவும் அவைகளின் உரிமைகள் மனிதர்களால்  பறிக்கப்படுவதற்கும், மனித-விலங்கு மோதல் உருவாவதற்கும்  முக்கிய  காரணம் .

-அரசு செய்ய வேண்டியது-

1. அனைத்து கிராம விலங்குகள் மருத்துவமனையையும் அதிரடி நடவடிக்கையின்  மூலம்  கண்காணிக்க  வேண்டும் .

2. அரசு நிதிபெற்ற NGO க்கள் முறைப்படுத்த வேண்டும். விலங்குகள் நலனுக்காக அரசு வழங்கிய நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அப்பணத்தை திரும்ப பெற வேண்டும். முறைகேடு செய்த NGO-க்கள்  மீது பண மோசடி வழக்கு பதிவு  செய்து  இந்த மோசடி NGO -க்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும்

3. CSR (Corporate Social Responsibility) மூலம் விலங்குகளுக்கு  நிதி பெறும் NGO-க்களின் கணக்குகளை தணிக்கை செய்து முறைப்படுத்த  வேண்டும்.

இதை விட்டுவிட்டு விலங்குகளின் நலனுக்காக தங்களால் இயன்றவற்றை உதவுபவர்கள். சமூக விரோதிகளாகவும் குற்றவாளிகளாகவும் அவமானப்படுத்தப்படுவது  எந்த வகையிலும்  நியாயமாகாது. விலங்குகள் நல கூட்டமைப்பு   சார்பாக  இதை மிக  வேதனை யுடன்  பதிவு செய்கின்றோம்.

விலங்குகள் நல ஆர்வலர்களின் உணர்வுகளையும், பாதுகாப்பையும், விலங்குகளின் உரிமைகளையும்   அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

அரசு என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து  உயிர்களுக்குமானது என்பதை  அரசு  அதிகாரிகள்  உணர வேண்டும்.

 

விலங்குகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக,

                                                                       

Hn.ஜெரால்டு
தலைவர்                                    
விலங்குகள் நல கூட்டமைப்பு ‍ தமிழ் நாடு ‍ - புதுச்சேரி