Pages

Tuesday, April 16, 2024


 05.04.2024

Chennai
AWFTP-PR-201-M80
chairman.awftp@gmail.com
Helpline: 9 487 487 000


-   தேர்தல் கோரிக்கைகள் -

விலங்குகள் நல கூட்டமைப்பு தமிழ்நாடு, புதுச்சேரி


வணக்கம்.

எங்களது இந்த கூட்டமைப்பு வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், தெருவோரம் அநாதையாக வாழும் விலங்குகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக தமிழ்நாடு‍ மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வருகின்றது.

மனிதர்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க பல்வேறு அமைப்புகள் வைத்துள்ளார்கள். ஆனால் விலங்குகள் தங்கள் அவல நிலையை எடுத்துச் சொல்ல முடியுமா?

எனவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எங்களது கூட்டமைப்பின் சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கின்றோம்.

வளர்ப்பு பிராணியான நாய்கள், குறிப்பாக பெண் நாய்கள் புறந்தள்ளப் படுகின்றன. இவைகள் தெருநாய்களாக மாறி கருத்தடையின்றி குழந்தை பெறுவதால் அநாதைகளாக எண்ணிக்கையில் பெருகிவருகின்றன.

இவைகளுக்கு தேவையான உணவு, குடிநீர், உறைவிடம், பாதுகாப்பு, மருத்துவம் இன்றி மனிதக் கொடுமைகளுக்கும், நோய்களுக்கும், விபத்துகளுக்கும் ஆளாகிவருகின்றன.

இதை தவிர்க்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தோறும் கருத்தடை மையங்களை (நாய், பூனை) அமைத்து விலங்குகள் நல ஆர்வலர்களின்/ அமைப்புகளின் கண்காணிப்பில் அரசு நடத்தவேண்டும். மாவட்டம் தோறும் உள்ள அரசு விலங்குகள் மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.

விபத்தில் அடிபட்ட/ ஊனமுற்ற/ வயதான அநாதை விலங்குகளை பாதுகாக்க மாவட்டந்தோறும் போதிய வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு மையங்களை முறையாக உருவாக்கவேண்டும்.

பொது இடங்களில் தெருவோர அநாதை விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகள் விலங்குகள் நல ஆர்வலர்களின் / அமைப்புகளின் கண்காணிப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவின் தேசிய பறவையான மயில்கள் இறகுகளுக்காகவும், விவசாய நிலங்களை அழிப்பதாக கூறி விசம் வைத்து கொல்லும் துயரச்சம்பவங்கள் பல இடங்களில் நடந்துவருகிறது. இதை தடுக்க மயில்கள் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட வேண்டும்.

விலங்குகள் விற்பனை செய்யும் கடைகளை தடை செய்து செல்லப் பிராணிகளாக வளர்க்கும் குருவி, வாத்து, நாய், பூனை, மீன், புறா, எலி போன்றவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

அழிந்து வரும் பறவைகள், கழுதை, கோவேறு கழுதைகள் போன்றவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஞ்சாயத்து, தாலூகா மற்றும் மாவட்ட அளவிலான விலங்குகள் நலச்சங்கங்கள் ஏற்படுத்தப் படவேண்டும்.

செயற்கையாக பால் அதிகம் சுரக்க ஊசி (oxytocin) போடும் பால் உற்பத்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விலங்குகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் வன விலங்குகள் சட்டத்தை மீறுவோர் (PCA ACT 1960 , WPA 1972) மீது கடும் நடவடிக்கை எடுத்து அதை கண்காணிக்க மாநில அளவில் குழு ஏற்படுத்தப்பட வேண்டும்.

யானைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும்.

வன விலங்குகளுக்கான உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து விலங்குகள் மருத்துவமனைகளிலும் நோய் தடுப்பு ஊசிகள் (Rabies, DHPPiL, Fvrcp) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வளர்ப்பு பிராணிகள் கணெக்கெடுத்து முறைப்படுத்தி (Microchip,Database), அவைகள் அநாதைகளாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகள், பறவைகளுக்கு எதிராக இயற்றும் நிகழ்வுகள் தடுக்கப்பட்டு விலங்குகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

வாழும் மற்றும் பொது இடங்களில் விலங்குகளுக்கு உணவளிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும் (article 51 ag of Indian constitution).

பள்ளி / கல்லூரி பாடத்திட்டங்களில் விலங்குகள் நலன் மற்றும் உரிமைகள் முக்கியப்படுத்தப்பட வேண்டும்.

 

 இந்தப் பிரபஞ்சம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல,

அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்பது உணரப்பட வேண்டும்.

நன்றி

******

விலங்குகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக,


Hn. ஜெரால்டு - தலைவர்
Hn. அண்ணாதுரை - துணைத்தலைவர்

விலங்குகள் நல கூட்டமைப்பு ‍ தமிழ் நாடு ‍ - புதுச்சேரி