மறந்து விட்டோம் நாம்.!
மிக மிக அவசரமாக
விஞ்ஞானம் வளர்ந்து, இயற்கை அழிந்து வரும் இச்சூழலில், பல்வேறு பணிச்சுமைகளுக்கு நடுவில், அடுக்குமாடிக்
குடும்பச் சூழலுக்கு இடையில், பொருளாதார தேடல்களுக்கு
மத்தியில்,
மறந்து விட்டோம்
நாம்.!
நாம் வாழ்ந்து
வரும் இச் சமகாலத்தில், தினமும் நாம் கடந்து செல்லும் சாலைகளிலும், மரங்களை இழந்த தெரு
ஓரங்களிலும், கொதிக்கும் தார் சாலைகளின் வெப்பத்தின் கோரப்பிடியில் வாழ்ந்து வரும்,
காலங்காலமாய் நன்றிக்கு உதாரணமாக திகழ்ந்து வரும் நாய்
என்னும் நம் சக உயிரியை,
மறந்து விட்டோம்
நாம்.!
குழந்தை முதல்
முதுமை வரை சுமார் 12 வருடங்கள் தெருவிலேயே பல்வேறு கொடுமைகளுக்கு மத்தியில் வாழும்
நாய் என்னும் நம் சக உயிரியை,
மறந்து விட்டோம்
நாம்.!
மறந்து விட்டோம்
நாம்.!
இருகரம் கூப்பி,
சிரம் தாழ்ந்து, பாதம் பணிந்து வேண்டுகின்றோம். தெருவோரம் அனாதைகளாக வாழும் விலங்குகளுக்கு
தினம் ஒரு வேளை உணவளிப்போம். பாதுகாப்போம்.
நன்றி.
விலங்குகளின்
நலன் மற்றும் உரிமைகளுக்காக,
ஜெரால்டு
தலைவர் - விலங்குகள் நல கூட்டமைப்பு தமிழ் நாடு-புதுச்சேரி
|| L.No: L720F10 || 10.04.2021 || சென்னை || Chairman.awftp@gmail.com || Mob: 9 486 486 486 ||