Pages

Monday, November 16, 2020

-கடைசி தீபாவளி-

அடையாறு எல்.பி ரோட்ல‌ இருக்கிற பாலத்திற்கு அடியில் தான் நான் இருந்தேன். வழக்கமாகப் பகல் நேரத்திலே அங்கேதான் இருப்பேன். இரவு நேரங்களில் பக்கத்தில் இருக்கிற தெருவுக்குச் சென்று ஒரு மரத்துக்குக் கீழே சிறிய  பள்ளம் தோண்டி படுத்துக் கொள்வேன்.

அந்தத் தெரு முழுவதும் அலுவலகங்கள் தான் அதனால் இரவு நேரங்களில் வண்டிகள் எதுவும் வராது.பாலத்தின் கீழே இருக்கிற பிச்சைக்காரர் அவருக்குக் கிடைக்கின்ற கறிசோற்றை எனக்கும் தருவார். எனக்கு அவர் நண்பர் அவருக்கு  நான்  நண்பர். என்ன ஆனந்த் ன்னு கூப்பிடுவாரு.

அப்பப்ப இன்னொருத்தர் வருவார்.வரும்பொழுதெல்லாம் பிஸ்கட், சோறு, பிரியாணி  இந்தமாதிரி தருவார்.  தண்ணி கூட ஒரு டப்பாவில் கொண்டுவந்து வைப்பார். அவரு வைக்கிறதுக்கு முன்னாடி தண்ணி குடிக்க கொஞ்சம் தூரம் நடந்து போகணும்.

அப்படிப் போகும்போது என்னோட தங்கச்சி மீது பெட்ரோல் பங்க் முன்னாடி வந்த ஒரு குப்பை வண்டிக்காரன் லமேலஏற்றிக் கொன்னுட்டான் அப்ப அவளுக்கு ஒரு வயசு. எனக்கு 5 வயசு இருக்கும் போது என்னோட அம்மா ரோடு கிராஸ் பண்ணும்போது ஒரு பஸ்சில் அடிபட்டு இறந்துட்டாங்க. அன்றிலிருந்து நான் தனியாக பழகிட்டேன் .இப்ப எனக்கு ஏழு வயசு இருக்கும்.

இப்ப கொஞ்ச நாளாகவே நான் இரவு நேரங்களில் தங்குகிற அந்த தெருவில் நிறைய சின்னபசங்களைப் பார்க்கிறேன்அங்க இங்க ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பாங்க. புதுசா குடி வந்திருக்கிறார்கள் போல‌. அப்பப்ப எனக்கு பிஸ்கட் தருவாங்க நான் அவங்களைப் பார்த்தாலே வாலைஆட்டிக்கொண்டு அவங்களிடம் சென்று விடுவேன். அன்று வழக்கமாகப் படுக்கின்ற மரத்துக்குக் கீழே படுத்து இருந்தேன். திடீர்னு ஒரு சத்தம் என்னவென்று  சுதாரிப்பதற்குள் என் கண்ணில் வந்து என்னவோ அடித்தது, அதில் என் கண் வெளியில் வந்துவிட்டது.

டேய்! இந்த நேரத்துல பட்டாசு வெடிச்சுட்டு...! என்று யாரோ அந்த பசங்களா அதட்டுற சத்தம் காதில் விழுந்தது. கண்ணு மண்ணு தெரியாம நான் ஓடிக்கொண்டிருந்தேன். முடிவில் பாலத்துக்கு கீழே இருக்கிற ஒரு கார்ருக்கு அடியில சென்று படுத்து விட்டேன்




ரெண்டு நாட்கள் வலியோட சாப்பிடக்கூட வெளியில் வராமல்  காருக்கடியிலேயே கிடந்தேன். யாரோ என்னை  வந்து கூப்பிட்டாங்க. நான் வெளிலையே வரவில்லைவழக்கமாக வந்து சாப்பாடு தண்ணீர் வைப்பவர்கூட வந்து அழைத்தார். எனக்கு அப்பொழுது இருந்த மனநிலையில் அவரைக் கூட நான் கடிக்கப் பார்த்தேன். சிறிது நேரம் சென்றபின்  இரண்டு மூன்று பேர் வலையோடு வந்து என்ன பிடித்துக்கொண்டு போனார்கள். பிடித்துக் கொண்டு சென்று ஆபரேஷன் செய்து  கண்களை எடுத்து விட்டார்கள்.

ஆனால் என்னால் பழைய நிலைக்கு வர முடியவில்லை. ஏதாவது சத்தம் கேட்டாலே என்னவோ பயமாக இருக்கிறது.

இத இப்பொழுது உங்களிடம் சொல்லிக்கொண்ருக்கும் இந்த நேரத்தில் கூட என்னோட உயிர்  பிரிந்துகொண்டிருக்கிறது. அநேகமாக இதான் என்னோட கடைசி  தீபாவளியாக  இருக்கும்.

 

Wednesday, November 4, 2020

 -ஒரு காலத்துல பங்களா நாய்.!-

திடீர்னு  ஒருநாள்  காலையில் எந்திரிச்சு பாத்தா ஒரு  சாக்கடைக்கு பக்கத்துல நிக்கிற காருக்கு அடியில இருக்கேன். எனக்கு எல்லாமே புதுசா இருந்துச்சு. இது வரைக்கும் இந்த ஏரியாவப் பார்த்ததே இல்லை. எனக்கு மோப்பசக்தி அதிகம் தான். என்னோட பங்களாவுக்கு என்னால திரும்பிப் போகமுடியும். நான் தேவையில்லை தானே கொண்டு வந்து இந்த ரோட்டுல விட்டாங்க!  


நான் கண்ணுக்கூட முழிக்காத சின்னக் கொழந்தைல இருந்தே அந்த பங்களாவில் தான் இருந்தேன். சின்ன வயசுல புசுபுசுன்னு வெள்ளையா  இன்னும் அழகா இருப்பேன். அங்கிருந்த ரோஷினியும், ரோஷனும் என்ன மாத்தி மாத்தி தூக்கிக் கொஞ்சுவாங்க.

அவங்களோட  விளையாடுவேன், ஹேன்ட்ஷேக் குன்னு சொன்னா என்னோட வலது முன்னங்காலை எடுத்து அவங்க கை மேலே வைப்பேன். ஜம்ப்னு சொன்னா குதிப்பேன். ரொட்டேட்னு சொன்னா என்னை நானே சுத்துவேன். ரன்னுன்னு சொன்னா ஓடுவேன். கேட்ச்ன்னு சொன்னா அவங்க போடுற பந்தை பிடிப்பேன். 

அந்த வீட்டுக்கு யார் வந்தாலும் அவங்க முன்னாடி செஞ்சு காமிப்பேன். செஞ்சு முடிச்சதும் பாத்தியா என்னோட டிரைனிங்க என்று அவங்க பெருமைப்பட்டுக்குவாங்க. சிலவங்க என்னையும் பாராட்டுவாங்க, ஏங்களோட வர்ரியானு கூட கேப்பாங்க. எனக்கு அப்போ அப்படி ஒரு சந்தோஷமா இருக்கும். 

அந்த பங்களாவில எனக்கு வேளாவேளைக்கு சாப்பாடு, படுத்துக்க தனியா இடம் இருந்தது. சொகமா படுத்து  தூங்கிடுவேன். பெல்ட் போட்டு சில நேரத்துல கட்டியும் போடுவாங்க.  யாராவது  புதுசா  வந்தா அவ்வளவு லேசுல அமைதியாக மாட்டேன்.  மத்தபடி  ரொம்ப சாது  நான்.

டாக்டர் ஒருத்தர் வருவாரு அவரைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது. ஒரு பெரிய ஊசி எடுத்து எனக்குப் போடுவாரு. நான் கத்திக் கதறி திமிறினாலும் அமுக்கிப்  புடிச்சு அந்த  ஊசியைப் போட்டு விட்டுருவாரு. எனக்கு நோயின்னு எதுவும் இல்லை. ஆனாலும் ஊசி போடுவாரு.  அப்படித்தான் ஒரு ஒன்றரை  வருஷமா  அங்கிருந்தேன்னு  நினைக்கிறேன். 

இந்த தெருவில கொஞ்ச நாள் முன்னாடி சைக்கிள்ல போன ஒருத்தரு என் வலது கால்மேல சைக்கிள  ஏத்திட்டாரு  ஆனா நான் ரோட்டு  ஓரத்தில தான் படுத்து  இருந்தேன். வலி தாங்காம நான்  அவரை  கொஞ்சம் துரத்த, அந்த நேரம் பார்த்து எதிரில் ஒரு வண்டிக்காரன்  வேகமா வந்து திரும்பவும் என்னோட அதே கால்ல வண்டியை  ஏத்திட்டான். 

மறுபடியும் வலி தாங்காம அவனை துரத்திட்டு போனேன். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இங்க வர்றவங்க போறவங்க எல்லாரும்  கல்லெடுத்து வீசறாங்க. பாருங்க, என் தலையில் இருக்கிற இந்த தழும்பு கூட அப்படியானது தான்.

அப்புறம் இந்த வலது கண்ணுக்கு மேலே இருக்கிற காயம்கூட இப்ப நேத்து யாரோ கல்லெடுத்து போட்டுட்டாங்க. செம வலி இப்ப கூட.  இப்பல்லாம் எந்த வண்டிய பாத்தாலும் பயமா இருக்கிறதால சில வண்டிய தொரத்துறேன். சாதுவாயிருந்த என்ன இந்த ரோடும், மக்களும் சேந்து இப்படி மாத்தியிட்டாங்க..

அந்த எதிர் வீட்ல  இருக்கிற அக்கா தான் எனக்கு மூணு வேளயும் சாப்பாடு தராங்க.

கொரோனாவால வீட்ல இருந்து வேலை செய்றாங்க போல இருக்குது.  ஆனா ஒவ்வொரு நாளும் நினைச்சுக்குவேன் இந்த அக்கா எவ்வளவு நல்லவங்க எனக்கு சாப்பாடு தர்ராங்களே அப்படீன்னு. இதுக்காகவாவது இந்த கொரோனா  ஏன்  இன்னும்  அஞ்சாறு வருஷம்  இருக்க  கூடாதுன்னு.

அந்த அக்காவை  எனக்கு பிடிக்கும் ஆனா அந்த அக்கா மாதிரி ஒரு அம்மா தான்  என்னை வளர்த்து  ரோட்டில் விட்டுட்டாங்க .  பழைய நியாபகத்துல திடீர்னு ஒருநாள் அந்த அக்காவை யே கடிக்க போயிட் டேன்.  இங்க வந்தப்ப உடம்புல புண்ணெல்லாம் இருந்துச்சு. இந்த அக்காதான் மருந்துபோட்டு சரிபண்ணாங்க. இப்ப பரவாயில்ல.

ஒன்னு தெரியுமா உங்களுக்கு, எனுக்கு லில்லின்னு பேர் கூட வச்சிருக்காங்க.


அப்புறம் நிறைய பேர் வர்றாங்க என்ன பாக்குறாங்க கூட்டிட்டு போறதாக் கூட சில பேரு பேசிக்கிட்டு இருந்தாங்க.  ஆனா எனக்கு யாரையும் பிடிக்கல.  ஆனா ஒரு அண்ணன் வந்தாரு. ஏனோ அவர ரொம்பப் புடிச்சு போச்சு. அவர் எங்கிட்ட பேசினாரு, கேட்டாரு எப்பிடி இங்க வந்தேன்னு. நான் அவர்கிட்ட நடந்த விஷயங்கள் எல்லாம் சொன்னேன். அப்புறம் அடுத்த நாளும் இன்னோரு அண்ணனையும் கூட்டிட்டு வந்தாரு. எனக்கு பிடிச்ச பெடிகிரி, மில்க் பிஸ்கட் யெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க. அப்ப‌வும் அவர் கிட்ட நிறைய விஷயங்கள சொன்னேன்.

கொஞ்ச நேரம் அவரும் என்னை தொட்டு பேசினாரு. அப்புறம் அவங்களுக்குள்ளே ஏதோ பேசிட்டு கிளம்பிட்டாங்க. நான் பொம்மேரியன் கிராசாம்.

மறுபடியும் என்ன அதே தெரு. ஒன்னு சொல்ல மறந்துட்டேன் இரண்டு நாளைக்கு முன்னாடி ஒருத்தரு பைக்கை நிறுத்திட்டு குச்சி வெச்சு அடி அடின்னு அடிச்சாரு ஏன்னே எனக்கு இப்ப வரைக்கும் தெரில. அடி வாங்கிட்டு ஓடாமா அப்படியே நின்னுட்டேன். அப்புறம் பக்கத்துல இருக்குற இந்த மஞ்சகலரு வீட்டு குட்டி பையன் என்ன அடிக்கிறதப் பார்த்துட்டு ஓடிப் போய் அவங்க ஆயாவக் கூட்டிட்டு வந்தான். அந்த ஆயா அந்த ஆள செம வாங்கு வாங்கிடுச்சு.

பங்களாவில இருக்கும் போது ரோட்ல போற நாய்ங்களப் பார்த்தா எவ்வளவு சுதந்திரமாக இருக்குது அப்படின்னு நினைப்பேன். ஆனா ரோட்டில் வாழ்வது எவ்வளவு கஷ்டம்னு இங்க வந்ததுக்கு அப்புறம் தான் தெரியுது. இந்த அக்கா மட்டும் இல்லைன்னா என் நிலமை அவ்வளவு தான். பாவம் என்ன விட மோசமா எத்தனயோ நாய்கள் தண்ணி கூட‌ இல்லாம‌ தெருவில கொடுமையில எப்படி வாழுதோ.?

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாதாகோயில்ல இருந்து இடது பக்கம் திரும்பினதுமே வர்ர இரண்டாவது தெருவுல இருக்கிற இந்த வெள்ள பங்களாவுக்கு எதிரில் தான் இருக்கேன். இந்த பக்கம் வந்தா வாங்க. புடிச்சிருந்தா வரேன்.